டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இன்று பொறுப்பேற்கும் ஆம் ஆத்மி அமைச்சரவையில் ஒரு பெண் எம்எல்ஏ கூட இடம்பெறவில்லை.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இன்று பொறுப்பேற்கும் ஆம் ஆத்மி அமைச்சரவையில் ஒரு பெண் எம்எல்ஏ கூட இடம்பெறவில்லை.

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.பாஜக வெறும் 7 இடங்களில் மட்டும் வென்றது.

பெண்கள் எப்படி

பெண்கள் எப்படி

டெல்லியில் நடந்த தேர்தலில் பெண்களும் சிறப்பான அளவில் பங்களித்து உள்ளனர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் 9 பேர் போட்டியிட்டனர். இதில் 8 பேர் வெற்றிபெற்றுள்ளனர். வேறு எந்த கட்சியிலும் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன்வந்தி சந்டேலா, ப்ரீத்தி தோமர், ராஜ் குமாரி தில்லியன், அதிஷி, ராக்கி பிர்லா, பாவ்னா கவுர், பார்மிளா தோக்காஸ், பந்தன குமாரி, ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.

வேறு யார்

வேறு யார்

இதில் 8 பேர் வெற்றிபெற்றனர். ப்ரீத்தி தோமர், ராஜ் குமாரி தில்லியன், அதிஷி, ராக்கி பிர்லா, பாவ்னா கவுர், பார்மிளா தோக்காஸ், பந்தன குமாரி, ஆகியோர் தேர்தலில் வெற்றிபெற்றனர். இதனால் ஆம் ஆத்மி கட்சியை பலரும் பாராட்டினார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. இன்று பொறுப்பேற்கும் அமைச்சரவையில் இவர்கள் பெயர் இடம்பெறவில்லை. இன்று மொத்தம் 6 அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.

பதவி ஏற்பு

பதவி ஏற்பு

அதன்படி மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெஹ்லாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் இன்று பதவி ஏற்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அமைச்சரவை கொடுத்த கெஜ்ரிவால், பெண்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மியை பலரும் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். ஆம் ஆத்மி இப்படி செய்ய கூடாது. குறைந்தது ஒருவருக்காவது அமைச்சரவை பதவி கொடுத்திருக்க வேண்டும்.

ஏன் இப்படி எல்லாம்

ஏன் இப்படி எல்லாம்

குறைந்த பட்சம் அதிஷிக்கு அமைச்சரவை பதவி கொடுக்க வேண்டும். ஆனால் ஆம் ஆத்மி அப்படி செய்யவில்லை என்று பலரும் புகார் அளித்துள்ளனர். டெல்லி அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். அப்போதும் பெரும்பாலும் பெண்களுக்கும் அமைச்சரவை பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். ஆனாலும் கூட, கெஜ்ரிவாலின் இந்த செயல் டெல்லி பெண்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Delhi Chief Minister Sworn in: No woman gonna take charge in Kejriwal Ministry today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X