டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் லாக்டவுனை நீட்டிக்க பிரதமர் முடிவு.. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் லாக்டவுனை நீட்டிக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் முடிவெடுத்திருப்பதாக கெஜ்ரிவால் தகவல்

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7400 ஆக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 250 ஆக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் அமலில் உள்ள லாக்டவுன் நிலை தற்போது 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    Delhi CM Arvind Kejriwal says that PM will extend lockdown

    இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்ததால் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என முதல்வர்கள் பிரதமருக்கு கோரிக்கை வைத்தனர். இதனிடையே ஒடிஸா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் லாக்டவுன் முறையே ஏப்ரல் 30, மே 1வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாக் டவுனை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் 7 மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். லாக்டவுனை பிரதமர் நீட்டிக்க முடிவு செய்துள்ளார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    கொடுமை.. லாக்டவுன் உத்தரவை மீறி இயங்கிய ஜவ்வரிசி ஆலையில் கசிந்த விஷவாயு.. 2 பேர் பலி.. சேலம் அருகே கொடுமை.. லாக்டவுன் உத்தரவை மீறி இயங்கிய ஜவ்வரிசி ஆலையில் கசிந்த விஷவாயு.. 2 பேர் பலி.. சேலம் அருகே

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் லாக்டவுனை நீட்டிப்பது என பிரதமர் சரியான முடிவை எடுத்துள்ளார். பல வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள்தான் இருக்கிறது. முன்கூட்டியே லாக்டவுனை நாம் தொடங்கியதால் இந்தியாவில் கட்டுக்குள் இருக்கிறது.

    தற்போது நாம் லாக்டவுனை விலக்கிக் கொண்டால் அனைத்தும் பாழாகிவிடும். எனவே லாக்டவுனை நீட்டிப்பது முக்கியமானது என தனது ட்வீட்டில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட்களை கண்டறிந்து அங்கு லாக்டவுனை கடுமையாக்குவது என்பன உள்ளிட்ட கருத்துகள் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    Delhi CM Aravind Kejriwal says that PM has taken correct decision to extend lockdown. Today, India’s position is better than many developed countries because we started lockdown early. If it is stopped now, all gains would be lost. To consolidate, it is imp to extend it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X