டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

13 சிறுமி பலாத்காரம்.. உடலில் ரத்த போக்கு அதிகமாக உள்ளது.. இது காட்டுமிராண்டித்தனமானது: கெஜ்ரிவால்

சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: "சிறுமி உடலில் காயங்கள் நிறைய இருக்கிறது.. அதிக அளவில் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது... இந்த தாக்குதல் சம்பவம் என்னை பெரிதும் பாதித்துள்ளது.. இம்மாதிரியான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது' என்று 12 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் என்றெல்லாம் இந்த காம கொடூரர்களுக்கு கணக்கே இல்லை.. யார், என்ன என்ற வரைமுறையே இல்லாமல் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள்.. நாளுக்கு நாள் நாட்டில், குறிப்பாக வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், மேற்கு டெல்லியில் 12 வயசு பெண்ணை வீடு புகுந்து நாசம் செய்துள்ளனர்.. இந்த பெண் ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.. அப்பா, அம்மா, அக்கா என எல்லாருமே ஒரு கம்பெனியில் வேலை பார்த்துதான் பிழைப்பை ஓட்டி வருகின்றனர்.. நேற்றுமுன்தினம்கூட அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

"என் வீட்டுக்காரர் கெஞ்சியும் என்னை விடல.. மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டார்".. மனைவி ஷாக் வாக்குமூலம்

பலாத்காரம்

பலாத்காரம்

சாயங்காலம் 5.30 மணி இருக்கும்.. அப்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அந்நேரம் பார்த்து காம கொடூரர்கள் உள்ளே நுழைந்து பலாத்காரம் செய்துள்ளனர்.. அத்துடன் ஒரு கூர்மையான ஆயுதத்தால் சிறுமியை பலமுறை தாக்கி உள்ளனர்.. அக்கம்பக்கத்தினர் சிறுமியின் அலறல் கேட்டு, அவரது வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

பால்கனி

பால்கனி

பால்கனியில் ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடப்பதை கண்டு அலறி துடித்து, உடனடியாக மீட்டு பக்கத்தில் இருந்த கிளினிக்குக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் உடலில் உள்ள காயங்களையும், வழியும் ரத்தத்தையும் பார்த்த டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு போக சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகு சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. அங்கு சிறுமிக்கு தீவிரமான சிகிச்சை நடந்தது.

பாதிப்பு

பாதிப்பு

அங்குதான், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்... அதன்பிறகு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு நள்ளிரவில் எய்ம்ஸுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இப்போது சிறுமி அங்கு ஆபத்தான நிலையில்தான் உள்ளார். இதையடுத்து, போலீசுக்கும் தகவல் தரப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணையை துரிதமாக ஆரம்பித்தனர்.

காமுகர்கள்

காமுகர்கள்

வீட்டுக்குள் நுழைந்த அந்த காமுகர்கள், சிறுமியின் தலையிலும் முகத்திலும் 5, 6 முறை அந்த கூர்மையான பொருளை வைத்து தாக்கி உள்ளது தெரியவந்தது. . சிறுமிக்கு தெரிந்தவர்தான் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறர்கள். இது சம்பந்தமாக விசாரணை துரிதமாகி உள்ளது.. நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை கெஜ்ரிவால் நேரில் சந்தித்தார்.. பிறகு இந்த சம்பவம் பற்றி சொல்லும்போது, "இது ஒரு காட்டுமிராண்டித்தனமான குற்றம்.. டெல்லி காவல்துறை தலைவரிடம் பேசியிருக்கிறேன்.. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.. சிறுமி மயக்க நிலையில் இருக்கிறார்.. ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது... 24 முதல் 48 மணி நேரம் வரை கண்காணிப்பில் இருப்பார்" என்று கூறினார்.

 ரத்த போக்கு

ரத்த போக்கு

மேலும் இந்த சம்பவம் குறித்து கெஜ்ரிவால் ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "சிறுமி உடலில் பலத்த காயம் இருந்தால், அதிக அளவில் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது... இந்த தாக்குதல் சம்பவம் என்னை பெரிதும் பாதித்துள்ளது.. இம்மாதிரியான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

English summary
delhi cm arvind kejriwal visits 12 year old sexual assault victim in hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X