டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்கிற நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் பிற்பகலே தேர்தல் அலுவலகத்திற்கு சென்றுவிட்டாலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவருக்கு 45வது டோக்கன் வழங்கப்பட்டது 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அவர் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும் போட்டியில் உள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் நேற்று சரியான நேரத்திற்கு சென்று முதல்வர் கெஜ்ரிவால் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

 முஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு முஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி தொகுதி

புதுடெல்லி தொகுதி

புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் அடைந்திருக்க வேண்டும். அங்கு ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

செல்லவில்லை

செல்லவில்லை

ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் பிற்பகல் 3 மணிக்குள் அவர் நடத்திய பிரம்மாண்ட வாகன பேரணி நிறைவடையவில்லை சரியான நேரத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. இதனால் தான் கெஜ்ரிவால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

கெஜ்ரிவால் மனு

கெஜ்ரிவால் மனு

இந்நிலையில் கடைசி நாளான இன்று புதுடெல்லி சட்டசபை தேர்தல் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு முன்னதாக கெஜ்ரிவால் சென்றுவிட்டார். ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் அவரால் தற்போது வரை வேட்பு மனு தாக்கல் செய்ய இயலவில்லை. கெஜ்ரிவாலுக்கு டோக்கன் நம்பர் 45 ஐ கொடுத்திருந்தார்கள்

கெஜ்ரிவால் மகிழ்ச்சி

கெஜ்ரிவால் மகிழ்ச்சி

கெஜ்ரிவால் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில். எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய காத்திருக்கிறது. எனது டோக்கன் எண் 45. வேட்பு மனு தாக்கல் செய்ய இங்கு பலர் இருந்தனர். ஜனநாயகத்தில் பலர் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன், "என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இதில் சதி இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.

பழிவாங்கப்படுகிறாரா

பழிவாங்கப்படுகிறாரா

இதற்கிடையில், ஆம் வேட்பாளர் எம்.எல்.ஏ சௌரப் பரத்வாஜ் சுமார் 35 வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகத்தில் முறையான வேட்பு மனுக்கள் அல்லது 10 முன்மொழிவாளர்கள் கூட இல்லாமல் அமர்ந்திருப்பதாக குற்றம் சாட்டினார். அவர்கள் முதல்வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்," என்று பரத்வாஜ் குற்றம்சாட்டினார். இதனிடையே எல்லாம் முறையாக இருந்தும் வேண்டுமென்றே கெஜ்ரிவாலை 6 மணி நேரத்திற்கு மேலாக வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தேர்தல் ஆணையத்தால் காக்க வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கெஜ்ரிவால் பழிவாங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனிடயே நீண்ட நேரத்திற்கு பிறகு கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

English summary
Delhi Assembly Elections : With Token No. 45, Kejriwal Waits in Queue to File Nomination as Deadline Looms
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X