டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது போலீஸ் வேலை.. நீங்களே போராடலாமா.. டெல்லி கமிஷனர் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் போராட்டம் நடத்திய போலீசார்

    டெல்லி: போலீசார் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    திஸ் ஹசாரே நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் போலீசாரை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டி, டெல்லியில், இன்று, போலீசார் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். போலீஸ் கமிஷனரை சந்திக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து அவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

    Delhi Commissioner of Police Amulya Patnaik request protesters

    இதையடுத்து, டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக், அவர்கள் மத்தியில் ஒலிபெருக்கி மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில், டெல்லியில் சில சம்பவங்கள் நடந்துள்ளன, நாம் அவற்றை நன்றாக கையாண்டோம். அதன் பிறகு நிலைமை மேம்பட்டு வருகிறது. எனவே, அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது நமக்கு கஷ்டமான நேரம். ஆனால், சட்டம் ஒழுங்கை பராமரித்தல் மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும். சட்டத்தின் பாதுகாவலர்களான நாம், தலைநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும், என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆனால் போராட்டக்காரர்களோ, தொடர்ந்து, போராட்டத்தை நடத்தியபடி உள்ளனர். அவர்கள் கிரண்பேடி பாணியிலான பதிலடி தேவை என கோஷமிடுவதையும் கேட்க முடிகிறது. 1988ம் ஆண்டு, வட டெல்லி துணை கமிஷனராக கிரண் பேடி பணியாற்றியபோது, வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் நடந்த மோதலை அவர் அதிரடியாக கையாண்டதை அவர்கள் நினைவுபடுத்தி கோஷமிடுகிறார்கள்.

    English summary
    Delhi Commissioner of Police Amulya Patnaik addresses the police personnel protesting at the Police Head Quarters (PHQ) in ITO: In last few days, there have been certain incidents in the capital which we handled very well. The situation is improving after that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X