டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமாக காரை ஓட்டி வந்து.. டக்கென நிறுத்தி.. ஆசிட்டை எடுத்து குடித்து.. தற்கொலை.. அதிர வைத்த அதிகாரி!

கொரோனா பீதியில் வருமான வரிதுறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

டெல்லி: காரை வேகமாக ஓட்டிக் கொண்ட வந்து, டக்கென நிறுத்தி ஆசிட்டை எடுத்து குடித்துவிட்டார் ஒரு ஐஆர்எஸ் அதிகாரி.. தலைநகரில் .இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா இந்தியாவில் தலைதூக்கி உள்ளது.. இதில் டெல்லி தினமும் மிரட்டுகிறது.. ஒவ்வொரு நாளும் தொற்றை கட்டுப்படுத்த டெல்லி அரசு ஏராளமான முயற்சிகளை செய்து வருகிறது.

delhi coronavirus: irs officer found dead inside car by dwarka police

இந்நிலையில், டெல்லியின் துவாரகா பகுதியில் ஐஆர்எஸ்அதிகாரி சிவராஜ் என்பவர் வசித்து வந்தார்.. அவருக்கு 56 வயதாகிறது.. 2006 ஆம் ஆண்டு பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி இவர். ஆர்கே புரத்தில் உள்ள ஆபீசில் வருமான வரி கூடுதல் ஆணையராக வேலை பார்த்து வந்தார்.

அவர்தான் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. காரை ஓட்டிக் கொண்டு வந்த இவர், திடீரென ஒரு ஆசிட்டை எடுத்து குடித்துவிட்டார்.. காரில் இருந்தபடியே இந்த ஆசிட்டை குடித்துள்ளார்.. மயங்கி கிடந்த அவரை ஒருவர் பார்த்து, போலீசுக்கு தகவல் சொல்லவும் அவர்கள் வந்து சிவராஜ்ஜை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் உயிர் ஏற்கனவே போய்விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

இதையடுத்து எதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர்.. அப்போதுதான் அவரது காரில் ஒரு லட்டரை கண்டெடுத்தனர்.. அதில், என்னால், என்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று வந்துவிடுமோ என்று பயமாக இருக்கு.. ஒருவேளை அவங்களுக்கும் தொற்று வந்துவிட்டால், அவங்க கஷ்டப்படுவதை என்னால பார்க்க முடியாது... அதனால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதி வைத்திருந்தார்.

மருத்துவ குழுவின் மருத்துவ குழுவின் "அந்த" அறிவுரை.. வேகமாக முடிவு எடுத்த முதல்வர்.. சென்னை லாக்டவுனுக்கு காரணம் என்ன?

கடந்த ஒரு வாரத்துக்குமுன்னாடிதான் சிவராஜ் கொரோனா டெஸ்ட் எடுத்திருந்தார்.. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்தது.. ஆனாலும் எங்கே தொற்று வந்துவிடுமோ என்ற பயத்திலும், தன்னால் குடும்பத்துக்கும் தொற்று வந்துவிடுமோ என்ற பீதியிலும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

எனினும் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் மேலும் பதட்டமாகி உள்ளது.

English summary
delhi coronavirus: irs officer found dead inside car by dwarka police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X