டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பலாத்காரம் செய்தார்.. புகார் கொடுத்த பெண்.. விசாரித்தால் விஷயம் வேற.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி நீதிமன்றத்தில் ஒரு வினோதமான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. பலாத்காரம் செய்துவிட்டார் என்று ஒரு பெண் புகார் அளிக்க, விசாரித்து பார்த்தபோது, அது அவரது கணவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் பலாத்கார புகாரிலிருந்து வெளியே வந்துள்ளார். டெல்லி நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளது.

இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஷ் நீதிமன்ற நீதிபதி, உமத் சிங் க்ரேவால் விசாரிக்கப்பட்டது. தனது தீர்ப்பில், இந்த சம்பவம் குறித்து நீதிபதி விவரித்துள்ளார்.

அதிர்ந்து போன பாஜக தலைகள்.. ரஜினிக்கு எதிராக கொதித்தெழுந்த அதிமுக அமைச்சர்கள்.. செம திருப்பம்! அதிர்ந்து போன பாஜக தலைகள்.. ரஜினிக்கு எதிராக கொதித்தெழுந்த அதிமுக அமைச்சர்கள்.. செம திருப்பம்!

பலாத்காரம் இல்லை

பலாத்காரம் இல்லை

2016ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, பலாத்காரம் நடைபெற்றதாக அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் நாங்கள் விசாரித்தபோது, சம்பவம் நடந்த அந்த தேதியில், புகார்தாரரின் கணவராகத்தான் குற்றம்சாட்டப்பட்டவர் இருந்துள்ளார் என்பது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. எனவே, தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக அந்த பெண் கூறுவதை ஏற்க முடியாது. இதை பலாத்காரமாக கருத முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கணவர்

கணவர்

பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த பெண், 2015ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, திருமணம் செய்துள்ளார். இதை குறுக்கு விசாரணையின்போது அந்த பெண்ணே தெரிவித்துள்ளார். ஆனால், 2016, ஜூலை 5ம் தேதி, தன்னை பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியுள்ளார். அன்றையதினம் அவர் குற்றம்சாட்டிய நபர், கணவர் என்ற அந்தஸ்தில்தான் இருந்துள்ளார். இவ்வாறு நீதிபதி மேலும் தெரிவித்தார்.

பஞ்சாப்பில் வசித்தனர்

பஞ்சாப்பில் வசித்தனர்

வழக்கு விவரம் இதுதான்: பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணும் அவர் கணவரும், பஞ்சாப்பில் வசித்துள்ளனர். ஆனால், பிறகுதான், தனது கணவர், திருட்டு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. எனவே, கணவருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து வாழ அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை. எனவே, டெல்லிக்கு அப்பெண் இடம் பெயர்ந்து வந்துள்ளார்.
ஆனால், அவர கணவர் விடவில்லை.

சிறை சென்றவர்

சிறை சென்றவர்

டெல்லிக்கே வந்து தனது மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுளளார். இனிமேல் திருடமாட்டேன், திருந்திவிட்டேன். சேர்ந்து வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் ஓகே சொல்லி ஒன்றாக வசித்துள்ளார். ஆனால், ஒருநாள் திடீரென வீட்டிலிருந்த ரூ.2 லட்சத்தை திருடிக் கொண்டு அவர் ஓடிவிட்டார். இதன்பிறகுதான் சண்டை அதிகரித்தது. உன்னோட வாழவே முடியாது என அந்த பெண் கூறிவிட்டார்.
திருட்டு தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரையடுத்து, கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கட்டாயம்

கட்டாயம்

இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்தபோதும் அடிக்கடி வீட்டுக்கு வருவதும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதுமாக இருந்துள்ளார். இதைத்தான் பலாத்காரம் என கூறி போலீசில் புகாராக கொடுத்துள்ளார் அந்த பெண். ஆனால் நீதிமன்றமோ, பெண்ணும் அவர் கணவரும், பஞ்சாப்பில் வசித்தபோது விரும்பியே உறவு கொண்டுள்ளனர். டெல்லியிலும் அவ்வாறே உறவு கொண்டுள்ளனர். ரூ.2 லட்சம் திருடப்பட்ட பிறகே, அந்த உறவு பெண்ணுக்கு பிடிக்கவில்லை.

விடுதலை

விடுதலை

எனவே, பலாத்காரம் என புகார் கொடுத்துள்ளார். ஆனால், அப்போதும் கூட விவாகரத்து பெறவில்லை என்பதால், இதை கணவர்-மனைவி இடையே நடந்த உறவாக பார்க்க வேண்டியுள்ளது. எனவே பலாத்கார பிரிவின்கீழ் தண்டனை கொடுக்க முடியாது. இவ்வாறு கூறிய நீதிமன்றம், அவரை விடுதலை செய்துள்ளது. கணவராக இருந்தாலும், மனைவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ய கூடாது என ஏற்கனவே சில தீர்ப்புகள் வெளியான நிலையில், டெல்லி நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A Delhi court has acquitted a man of rape charge saying the offence cannot be made out as the complainant was married to him when he forcibly established physical relations with her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X