டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க.. நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஞ்சன் கோகாய் மீது புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க: நீதிமன்றத்தில் வாதம்- வீடியோ

    டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியரின் ஜாமீனை ரத்து செய்ய டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்தி வைக்கப்பட்டது.

    மே 23ம் தேதிக்கு நீதிபதி மனிஷ் குரானா வழக்கை ஒத்தி வைத்தார். நீதிபதி மீது புகார் கூறிய பெண் சார்பில் வழக்கறிஞர் வி.கே.ஓரி ஆஜராகியிருந்தார். அவர், அந்த பெண்மணியின் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் சிபியூக்களை டெல்லி போலீசிடமிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரினார். ஆனால், உரிய நேரத்தில் இந்த கோரிக்கையை முன் வைப்பதே சரியாக இருக்கும் என கூரிய ஓரி, இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டது கவனிக்கத்தக்கது.

    Delhi Court adjourns plea to cancel bail of woman who accusing CJI

    நவீன் குமார் என்ற இளைஞர், உச்சநீதிமன்ற ஊழியராக இருந்த இந்த பெண்ணிடம் (நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்) ரூ.50,000 கொடுத்து ஏமாற்றமடைந்தவராம். சுப்ரீம்கோர்ட்டில் கிளாஸ் 4 பிரிவில் வேலை வாங்கி தருவதாக அந்த பெண் கூறிய ஆசை வார்த்தையை நம்பி நவீன்குமார் ரூ.50,000 முன்பணம் கொடுத்துள்ளார். ஆனால், அப்பெண் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இதுதொடர்பாக நவீன்குமார், டெல்லி போலீசில் அளித்த புகாரையடுத்து, அப்பெண் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.

    உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டிஉங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி

    இந்த நிலையில்தான், அவரது ஜாமீனை ரத்து செய்ய டெல்லி காவல்துறை, டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதேநேரம், வழக்கில் சம்மந்தப்பட்ட நவீன்குமாருக்கு சம்மன் அனுப்பவில்லையாம். எனவேதான் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Court of Metropolitan Magistrate (CMM) today adjourned Delhi Police’s plea seeking cancellation of the bail of the former Supreme Court staffer who has recently levelled allegations of sexual harassment against Chief Justice of India Ranjan Gogoi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X