டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட முடியாது: டெல்லி கோர்ட் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரி டெல்லி அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்திருந்தது. ஆனால் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சட்ட வாய்ப்பை பயன்படுத்தி நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

Delhi court dismisses Tihar jail authorities seeking a fresh date for hanging Nirbhaya case convicts.

இதனால் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், டெல்லி அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் புதிய மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

அதில், நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இம்மனுக்களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஷாகீன் பாக் போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு.. டெல்லி தேர்தல் முடிந்துதான் விசாரணை.. சுப்ரீம் கோர்ட்!ஷாகீன் பாக் போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு.. டெல்லி தேர்தல் முடிந்துதான் விசாரணை.. சுப்ரீம் கோர்ட்!

மேலும் எந்த ஒரு அனுமானத்தின் அடிப்படையிலும் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க இயலாது என்றும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

English summary
Delhi's Patiala House Court dismissed that Tihar jail authorities seeking a fresh date for hanging the Nirbhaya case convicts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X