• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

100 பேரை கொன்று.. சடலத்தை துண்டு துண்டாக்கி.. முதலைக்கு வீசிய டாக்டர்.. பரபர பின்னணி.. திகில் டெல்லி

|

டெல்லி: 100-க்கும் மேற்பட்ட டிரைவர்களை கொன்று, அவர்களின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி முதலைகளுக்கு வீசிய குரூர நபரை போலீசார் மறுபடியும் கைது செய்தனர்.. அந்த நபர் யார் என்பது குறித்த செய்திதான் இது!

ஆயுர்வேத டாக்டர் தேவேந்திர சர்மா.. 1984-ல் படித்து முடித்துவிட்டு, ராஜஸ்தானில் ஒரு சின்ன கிளினிக் வைத்து நடத்த தொடங்கி உள்ளார்.. ஆனால் அதில் நஷ்டம்தான் அடைந்தார்.

அதனால் பணம் சம்பாதிக்க, 1994-ல் ஒரு கேஸ் கம்பெனி தொடங்கினார்.. அதிலும் நஷ்டம் தான் வந்தது.. அந்த கம்பெனிக்கு 11 லட்சம் செலவு செய்திருந்தார்.. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அதே கேஸ் கம்பெனியை போலியாக மாற்றினார்.

விடாமல் தலைவர்களைத் துரத்தும் கொரோனா.. கார்த்தி சிதம்பரத்தையும் தொற்றியது.. வீட்டுத் தனிமையில்!

உத்திரபிரதேசம்

உத்திரபிரதேசம்

பிறகு ஒரு கும்பலை வேலைக்கு வைத்தார்.. இவர்களின் வேலை, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் கேஸ் லாரிகளை வழி மறி அதன் டிரைவர்களை கொல்வதுதான்.. அப்படி கொன்றுவிட்டு, அந்த கேஸ் சிலிண்டர்களை திருடி கொண்டு வந்து சொந்த கம்பெனியில் வைத்து விற்று வந்தார். இப்படியே 1995 முதல் இந்த கொலைகள் நடந்துள்ளது.. 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் இப்படி கொல்லப்பட்டனர்.

கொலைகள்

கொலைகள்

எல்லா மாநில ஹைவேஸ்களிலும், எப்படி கேஸ் லாரி டிரைவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள், கேஸ்கள் கொள்ளை போகின்றன என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.. அதுமட்டுமல்ல, கொலை செய்யப்பட்ட அந்த டிரைவர்களின் சடலங்களை புதைத்தாலோ, எரித்தாலோ சந்தேகம் வரும் என்பதற்காக, ஒவ்வொரு டிரைவர்களை கொன்றவுடன் அந்த சடலத்தை வெட்டி துண்டாக்கி உபியில் உள்ள முதலைகளுக்கு இரையாக போட்டுள்ளார்.

எஸ்கேப்

எஸ்கேப்

இதையடுத்து இவரை போலீசார் அதிரடியாக கைது செய்து ஜெய்ப்பூர் ஜெயிலில் அடைத்தனர்.. மொத்தம் 16 வருஷங்கள் உள்ளே இருந்தார்.. கடந்த ஜனவரி மாசம் 20 நாள்கள் பரோலில் வந்தவர், திடீரென எஸ். ஆனார்.. எங்கே போனார் என்றே தெரியவில்லை.. அதனால் இவரை தேடும் பணியில் போலீசார் மும்முரமாயினர்.. இந்த சமயத்தில்தான் கிட்னிகளை யாரோ திருடுகிறார்கள் என்று போலீசாருக்கு தகவல் வந்தது.

ஷர்மா

ஷர்மா

மேலும் டெல்லி பகுதியில் இந்த சம்பவம் நடப்பதால், ஷர்மா மீது போலீசாரின் கவனம் திரும்பியது.. அதனால், அங்கு தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.. அப்போதுதான், டெல்லியில் தன்னுடைய சொந்தக்காரர் வீட்டில் போய் ஷர்மா பதுங்கி கொண்டிருந்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, போன மே மாசம் இவருக்கு ஒரு கல்யாணத்தையும் செய்து கெண்டுள்ளார்.. அவருக்கு 2வது கல்யாணம் இது.. மாப்பிள்ளைக்கு இப்போ வயசு 62.

இன்னொரு கல்யாணம்

இன்னொரு கல்யாணம்

இதையடுத்து மாப்பிள்ளை சர்மாவை கைது செய்தனர் போலீசார்.. அப்போது விசாரணையில், "என் பாதி வாழ்க்கை ஜெயிலிலேயே நாசமா போச்சு.. கல்யாணம் பண்ணி, புதுசா வாழணும்னு ஆசை வந்துடுச்சு.. அதனால்தான் இப்படி தப்பி வந்து கல்யாணம் செய்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

இப்போது சர்மா கைதாகி உள்ளதால், 16 வருஷத்துக்குமுன்பு இவர் செய்த கொலைகள், அந்த சடலங்களை முதலைகளுக்கு வீசியது, பரோலில் தப்பியது, கிட்னி திருட்டு, 2வது கல்யாணம்.. என இவரது ஒவ்வொரு பகீர்களும் பெரும் பரபரப்பு செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
delhi doctor arrested again who killed 100 people
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X