டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னுடைய முதுகை வலிமையாக்குவேன்.. யாராலும் தாக்க முடியாது.. ராகுலின் கருத்துக்கு மோடி பதிலடி!

என்னுடைய முதுகை வலிமையாக்குவேன், நீங்கள் தாக்கினால் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு நான் வலிமை அடைவேன், என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி லோக்சபாவில் பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: என்னுடைய முதுகை வலிமையாக்குவேன், நீங்கள் தாக்கினால் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு நான் வலிமை அடைவேன், என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி லோக்சபாவில் பேசி உள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது உரையில் இன்னும் 6 மாதம் கழித்து பிரதமர் மோடி வீட்டை விட்டு வெளியே வர முடியாது, அப்படி அவர் வீட்டை விட்டு வெளியே வந்தால், இளைஞர்கள் அவரை குச்சியால் அடிப்பார்கள்.

அவர் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்று கூறி ஏமாற்றிவிட்டார். வேலை வாய்ப்பு இல்லாமல் இந்த நாடு முன்னேறாது என்பதை அவர் உணரும் காலம் வரும். இந்தியாவில் 45 வருடத்தில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, என்றார்.

இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது.. பணத்தட்டுப்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது.. மோடி உரை! இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது.. பணத்தட்டுப்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது.. மோடி உரை!

ராகுல் பேச்சு

ராகுல் பேச்சு

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அவர் இது தொடர்பாக லோக்சபாவில் அளித்த பதிலில், ஒரு அரசியல் தலைவர் சொல்கிறார், நான் ஆறு மாதத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்தால் மக்கள் என்னை குச்சியால் அடிப்பார்களாம். ஆனால் அந்த 6 மாதத்திற்குள் நான் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வேன். என்னுடைய முதுகை வலிமையாக்குவேன். நீங்கள் தாக்கினால் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு நான் வலிமை அடைவேன். என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

பதிலடி என்ன

பதிலடி என்ன

நான் ஏற்கனவே இதை எதிர்கொண்டு இருக்கிறேன். கடந்த 20 வருடங்களில் பல முறை இதை எதிர்கொண்டு இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இருந்து, அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் அவர்கள்தான் எமெர்ஜென்சி மூலம் இந்திய அரசியலமைப்பை உடைத்தது. அவர்கள்தான் இந்திய அரசியலமைப்பை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆலோசனை

ஆலோசனை

அவர்கள் தான் தேசிய ஆலோசனை கமிட்டியை பல வருடம் கட்டுப்படுத்தி வந்தனர். இந்திய அரசியலமைப்பை காக்க வேண்டும் என்று கூறிவிட்டு நீங்கள் டெல்லியில் ஆடுவது எங்களுக்கு தெரிகிறது. மக்கள் இதை பார்த்து வருகிறார்கள். காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை நீக்கினால், பற்றி எரியும் என்று கூறினார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்கலாம் என்று நினைத்த தலைவர்களை மக்கள் இப்போது புறக்கணித்துள்ளனர்.

சிஏஏ போராட்டம்

சிஏஏ போராட்டம்

சிஏஏவை கொண்டு வர ஏன் இந்த அவசரம் என்று சிலர் கேட்டார்கள். இது மத ரீதியாக மக்களை பிரிக்கும் என்றார்கள். இதற்காக அவர்கள் பல விஷயங்களை முயன்றார்கள். இது பாகிஸ்தான் பேசும் மொழி. பாகிஸ்தான் இஸ்லாமியர்களை வைத்து என்ன செய்ததோ, அதைத்தான் தற்போது இந்தியாவில் சிலர் முஸ்லீம்களை தூண்டிவிட்டு செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் போல செயல்படுகிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Delhi Assembly Election: I will do enough Surya namaskars to make my back tough enough replied Modi to Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X