டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்.. அமித் ஷாவின் வலதுகை.. மோடியின் செல்லம்.. இப்படி தோத்துட்டாரே!

பாஜகவின் மிக முக்கியமான வேட்பாளராக பார்க்கப்பட்ட தேஜேந்தர் பால் சிங் டெல்லி ஹரிநகர் தொகுதியில் மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக சரிய மத அரசியலே காரணம்.. வெறுப்பு அரசியல் எடுபடவில்லை.. தமிழக ஆம் ஆத்மி அதிரடி - ஆடியோ

    டெல்லி: பாஜகவின் மிக முக்கியமான வேட்பாளராக பார்க்கப்பட்ட தேஜேந்தர் பால் சிங் டெல்லி ஹரிநகர் தொகுதியில் மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது. இரட்டை இலக்கங்கள் கூட பெறாமல், பாஜக ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வென்றது, அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

    நேற்று டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.

    யார்

    யார்

    பாஜகவின் மிக முக்கியமான வேட்பாளராக பார்க்கப்பட்டவர் தேஜேந்தர் பால் சிங். தேஜேந்தர் பால் சிங் பாஜகவின் ஸ்டார் சோஷியல் மீடியா ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் பாஜகவிலேயே இல்லாமல் இருந்தவர்தான். தனக்கு என்று தனியாக வலதுசாரி குழு ஒன்றை வைத்து இருந்தார். 34 வயது நிரம்பிய இவர், தனக்கு என்று தனியாக பகத் சிங் கிரந்தி சேனா என்ற குழுவை தொடங்கி நடத்தி வந்தார். இந்த குழுவின் ஒரே நோக்கம், எதிர் கருத்து பேசும் எல்லோரையும் தாக்குவது. அதை சிறப்பாக தேஜேந்தர் பால் சிங் செய்து வந்தார்.

    தாக்குதல்

    தாக்குதல்

    தாக்குவது என்றால், சாதாரணமாக இணையத்தில் தாக்குவது கிடையாது. நேரடியாக அவர்கள் இடத்திற்கே சென்று கடுமையாக கட்டை, கற்களால் தாக்குவது. உதாரணமாக மோடிக்கு எதிராக பேசியதால், பிரஷாந்த் பூஷன் கூட்டம் ஒன்றுக்கு சென்று நேரடியாக தேஜேந்தர் பால் சிங் ஆட்கள் பூஷனின் ஆதரவாளர்களை தாக்கினார்கள். அதேபோல், அருந்ததி ராய் மோடிக்கு எதிராக பேசினார் என்பதால், நேரடியாக அவரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று அவரின் வாசகர்களை தாக்கினார்.

    தீவிரம் 'என்ன தீவிரம்

    தீவிரம் 'என்ன தீவிரம்

    தேஜேந்தர் பால் சிங் அந்த அளவிற்கு கொடூரமான, தீவிரமாக வலதுசாரி கொள்கை கொண்டவர். இவர் தன்னுடைய இமேஜ் பற்றி எந்த கவலையும் கொண்டது கிடையாது. டிவிட்டர் மூலம்தான் இவர் இணையம் முழுக்க வைரலானார். டிவிட்டரில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டுகள், மம்தா, திமுக என்று யாரையும் விட்டு வைக்காமல் மிக மோசமாக கிண்டல் செய்தார். தனிப்பட்ட வகையில் தரமற்ற வகையில் இவரின் கிண்டல் இருக்கும்.

    போலி வீடியோ

    போலி வீடியோ

    தன்னுடைய நிலைப்பாட்டை நிரூபிப்பதற்காக பலமுறை இவர் பொய்யான செய்திகளை பரப்பி இருக்கிறார். ஆம் நிறைய பொய்யான வீடியோக்களை, சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை இவர் பகிர்ந்து இருக்கிறார். இவரின் அதிரடி வலதுசாரி கொள்கை பிடித்து போய் அமித் ஷா இவரை கொக்கி போட்டு பாஜகவிற்கு தூக்கினார். கட்சியில் இவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டது. மோடி கூட டிவிட்டரில் தேஜேந்தர் பால் சிங்கை பின் தொடர்ந்தார்.

    தொடக்கம் இவரே

    தொடக்கம் இவரே

    இவர் பாஜகவில் சேர்ந்த பின் இன்னும் விஸ்வரூபம் எடுத்தார். முக்கியமாக தீபிகா படுகோன் ஜேஎன்யூ சென்று திரும்பியதால் அவருக்கு எதிராக டிவிட் போட்டார். சப்பாக் படத்தை முதலில் புறக்கணிக்க வேண்டும் என்று #BoycottDeepika டேக் உருவாக்கியதே தேஜேந்தர் பால் சிங்தான். ஆம் பாஜக செய்த இணைய வழி போராட்டங்கள், கலகங்கள் பலவற்றை தேஜேந்தர் பால் சிங்தான் முதலில் தொடங்கி வைத்தது.

    பெரிய படை

    பெரிய படை

    இதனால் இவர் மோடியின் செல்லப்பிள்ளை என்று கூட கருதப்பட்டார். மோடியை நேரில் சந்தித்தது பேசியது தன்னுடைய வாழ்நாள் சாதனை என்று தேஜேந்தர் பால் சிங் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். என்னை யார் கைவிட்டாலும், என் சோசியல் மீடியா படை கைவிடாது என்று அமித் ஷா கூறியதற்கும் இவரே காரணம். தேஜேந்தர் பால் சிங்கும் இந்த சோஷியல் மீடியா படையில் ஒருவர். தேஜேந்தர் பால் சிங்கை டெல்லியில் அமித் ஷாவின் வலதுகை என்றுதான் எல்லோரும் கூறினார்கள்.

    எப்படி நிறுத்தியது

    எப்படி நிறுத்தியது

    இவரைத்தான் பாஜக டெல்லியில் தேர்தலில் நிறுத்தியது. தேஜேந்தர் பால் சிங் பாஜக சார்பாக ஹரிநகர் தொகுதியில் போட்டியிட்டார். இவரை நிறுத்திய போதே, பலரும் அதையே கேள்வி எழுப்பினார்கள். சர்ச்சைகளின் மன்னனுக்கு சீட்டா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். இன்னும் சிலரோ, பிரக்யா தாக்கூரே வென்றுவிட்டார், தேஜேந்தர் பால் சிங் வெல்ல மாட்டாரா என்று கூறினார். எல்லோரும் இவரின் தொகுதியை தீவிரமாக கவனித்தார்கள்.

    என்ன அதிர்ச்சி

    என்ன அதிர்ச்சி

    ஆனால் பாஜக அதிர்ச்சி அடையும் வகையில் தேஜேந்தர் பால் சிங் நேற்று தோல்வி அடைந்தார். ஹரிநகர் தொகுதியில் தேஜேந்தர் பால் சிங் 37,956 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆனால் ஆம் ஆத்மி வேட்பாளர் 58,087 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தேஜேந்தர் பால் சிங் மிக மோசமான தோல்வியை தழுவினார். இவரின் இந்த மோசமான தோல்வி பாஜகவின் மூத்த தலைவர்களை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பாஜகவின் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக இது பார்க்கப்படுகிறது.

    English summary
    Delhi Election Result: BJP shocked as Tejinder Pal Singh Bagga lost in Harinagar with huge margin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X