டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி தேர்தல் தோல்வி.. பாஜக அலுவலகம் எப்படி இருக்கு பாருங்க.. ஒரு தலைவரையும் காணோமே

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi assembly elections | BJP lose with small margins

    டெல்லி: டெல்லியில் என்னதான் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானாலும்கூட, பாருங்க.. கடைசி நேரத்தில் நடக்கும் மாஜிக்கை என பாஜக திரும்ப திரும்ப சொல்லி வந்தது.

    ஆனால், இன்று தேர்தல் முடிவை பார்த்தால், மாஜிக்கும் நடக்கவில்லை, ஒரு மாற்றமும் நிகழவில்லை என்பதை பாஜக தொண்டர்கள் புரிந்து கொண்டனர். இதனால், டெல்லியிலுள்ள பாஜக தலைமையகமே வெறிச்சோடி கிடக்கிறது. வெற்றியை கொண்டாடலாம் என்று பட்டாசுடன் வந்த தொண்டர்கள், மோக்கா, மோக்கா கிரிக்கெட் விளம்பரம் ரிப்பீட் ஆனதை போல உணர்ந்து மவுனமாக நிற்கிறார்கள்.

    Delhi election results: The mood at BJP headquarters, is very silent

    தலைநகராச்சே.. டெல்லியாச்சே.. 15 வருஷம் போச்சே.. இன்னும் மீட்க முடியலையே.. கண்ணை கசக்கும் காங்கிரஸ்!தலைநகராச்சே.. டெல்லியாச்சே.. 15 வருஷம் போச்சே.. இன்னும் மீட்க முடியலையே.. கண்ணை கசக்கும் காங்கிரஸ்!

    பாஜக அலுவலகத்திற்குள், அதன் செய்தித்தொடர்பாளர்களோ, அல்லது மேல்மட்ட தலைவர்களோ யாருமே இல்லை. வெறுமனே, தொண்டர்கள், இருக்கிறார்கள். கவலைதான் அவர்கள் முகத்தில் தாண்டவமாடுகிறது.

    ஆனால், ஆம் ஆத்மி அலுவலக நிலைமையே வேறு. டெல்லியில் மட்டுமல்ல, மும்பையிலும் கூட ஆம் ஆத்மி தொண்டர்கள் செம ஹேப்பியாக, வெற்றியை கொண்டாடி களித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் பாஜக கொஞ்சம் ஃபைட் கொடுப்பதை போல இருந்தது. இப்போது நிலைமை இன்னும் மோசம். ஆம் ஆத்மி 50 தொகுதிகளுக்கும் மேல் அமோகமாக முன்னிலை வகித்து வருகிறது. எனவே பாஜக தொண்டர்கள், வருத்தத்தில் உள்ளனர்.

    மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில தேர்தல்களும் தங்களுக்கு சாதகமாக போகாததன் வருத்தம் அவர்கள் முகங்களில் தெரிகிறது.

    English summary
    The mood at BJP headquarters, is very silent as No prominent spokespersons was there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X