• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"சிவக்கிறது" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. விடாமல் போராடும் விவசாயிகள்!

|

டெல்லி: நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். டெல்லியுடன் குருகிராம், காஜியாபாத் , ஃபரிதாபாத் ஆகியவற்றை இணைக்கும் 3 முக்கிய நெடுஞ்சாலைகளை மறியல் மூலம் முடக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் - 2020, விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்- 2020, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் - 2020 என்பனதான் அந்த 3 சட்டங்களும்!

இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என்கிறது மத்திய அரசு.. ஆனால், விவசாயத்தை கொண்டு போய், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதா? என்று ஆவேசமாக கேள்வி கேட்கிறார்கள் விவசாயிகள்... அதனால்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். "டெல்லி சலோ" போராட்டத்தில் விவசாயிகள், பெண்களும் கைக்குழந்தைகளுடன் ஈடுபட்டு வருவதால், பதற்றம் நீடித்து வருகிறது. ''விவசாயிகளை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றன'' என்று பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முடக்க போவதாக விவசாயிகள் மிரட்டல்.. அமித்ஷா அவசர ஆலோசனை

தடைகள்

தடைகள்

உத்தரப் பிரதேசம், ஹரியானா எல்லைகளில் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விவசாயிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.. தடைகளை உடைத்து முன்னேறி வந்தனர்.. விவசாயிகளைத் தடுத்து நிறுத்த மணல் மூட்டைகளை நடுரோட்டில் போலீசார் வைத்தனர்.. அவைகளை புரட்டி போட்டு முன்னேறினர் விவசாயிகள்.. பிறகு முள்கம்பி வேலிகளை அமைத்தனர்... அவைகளை பிடுங்கி போட்டு முன்னேறினர் விவசாயிகள்.. இறுதியில் வேறு வழியில்லாமல் டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதற்கு அரசு அனுமதித்தது. #IamWithFarmers என்ற ஹேஷ்டேக் இந்த 5 நாட்களாக ட்விட்டரையே அசைத்து பார்த்து வருகிறது.

வியப்பு

வியப்பு

குறிப்பாக விவசாயிகளின் திரண்ட கூட்டம், நாட்டு மக்களையே வியப்பில் ஆழ்த்திவிட்டது.. அன்று அன்னா ஹசாரே, கெஜ்ரிவால் நடத்திய சொற்ப கூட்டத்தையே பார்த்து மிரண்டு போன நம் மக்களுக்கு, இன்றைய டெல்லி விவசாயிகள் கூட்டம் மலைப்பை தந்து வருகிறது.. இவர்களையும், இவர்களின் கோரிக்கைகளையும் மத்திய ஆட்சியாளர்கள் எப்படி அணுகப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

அடக்குமுறை

அடக்குமுறை

இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என்கிறது மத்திய அரசு.. ஆனால், விவசாயத்தை கொண்டு போய், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதா? என்று ஆவேசமாக கேள்வி கேட்கிறார்கள் விவசாயிகள்... அதனால்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். "டெல்லி சலோ" போராட்டத்தில் விவசாயிகள், பெண்களும் கைக்குழந்தைகளுடன் ஈடுபட்டு வருவதால், பதற்றம் நீடித்து வருகிறது. ''விவசாயிகளை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றன'' என்று பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

முடிவுகள்

முடிவுகள்

ஆனால், ஒவ்வொரு விவசாயி முகத்திலும் தைரியம் பளிச்செனெ காணப்படுகிறது.. எத்தனை அடக்குமுறைகளை திணித்தாலும் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது.. 6 மாசத்துக்கு தேவையான அரிசி, பருப்பு,, கோதுமை, குளிருக்கு பெட்ஷீட், கம்பளி, அடுப்பு, என ஒரு முடிவுடன்தான் இந்த போராட்டத்துக்கு அவர்கள் கிளம்பி வந்துள்ளனர்..

விவசாயிகள்

விவசாயிகள்

இதனிடையே, ராம்லீலா மைதானத்திற்கு பதிலாக, நிரங்கரி மைதானத்தை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், டெல்லியின் எல்லையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.. மேலும், டெல்லியுடன் குருகிராம், காஜியாபாத் , ஃபரிதாபாத் ஆகியவற்றை இணைக்கும் 3 முக்கிய நெடுஞ்சாலைகளை மறியல் மூலம் முடக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.

3 சட்டங்கள்

3 சட்டங்கள்

ஆக, விவசாயிகளின் போராட்டம் நடத்தும் இடம் குறித்துதான் பஞ்சாயத்து ஓடி கொண்டிருக்கிறதே தவிர, 3 சட்டங்களும் திரும்ப பெறுவதற்கான அறிகுறி ஒன்றையும் இதுவரை காணோம்.. இதை வெறும் போராட்டமாக மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு கடந்து விட முடியாது.. இன்னும் வடமாநிலங்களில் தொற்று குறையவில்லை.

ஆபத்து

ஆபத்து

ஏற்கனவே இப்படித்தான், திடுதிப்பென லாக்டவுன் போடபோய், பொதுமக்கள் ரயில்வே ஸ்டேஷன்களில் திரண்டு போராடினர்.. கூட்டம் கூட்டமாக நடந்து போய், தொற்றையும் தங்களுக்குள் அதிகமாக பெற்றுக் கொண்டனர்.. இன்று லட்சக்கணக்கில் விவசாயிகள் திரண்டுள்ளது, தொற்றை மேலும் அதிகப்படுத்தும் ஆபத்தை உணர்த்துகிறது... (இதையும் மத்திய அரசுதான் சமாளிக்க வேண்டும் என்பது வேறு விஷயம்).. ஆனால் கொரோனா பாதிப்பைவிட, இந்த சட்டங்கள் மூலம் வரும் ஆபத்துதான் தங்களுக்கு அதிகம் என்று உணர்ந்தே விவசாயிகள் இப்படி உறுதிப்பிடியுடன் இருக்கிறார்கள்.

பாதிப்பு

பாதிப்பு

மற்றொரு பக்கம் டெல்லியில் குளிர் அதிகமாக இருக்கிறது.. போராடி கொண்டிருப்பவர்களில் பெண்களும் உண்டு.. அந்த பெண்களின் கைகளில் பிஞ்சுக் குழந்தைகளும் உண்டு.. குளிரை எந்த அளவுக்கு இவர்கள் தாங்கி கொள்வார்கள் என்று தெரியாது.. இவர்களில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்றும் தெரியவில்லை.. ஆனால், தொற்று, குளிர், போலீசின் தடுப்பு போன்றவற்றையும் மீறி நெஞ்சுறுதி மிக்க போராட்டத்தினால் டெல்லி சிவந்து கொண்டிருக்கிறது!

 
 
 
English summary
Delhi Farmers have announced blocking highways connecting
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X