டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

21வது நாளாக தொடரும் போராட்டம்.. விவசாயிகளை அப்புறப்படுத்தகோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளாக நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகரில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய மனுவானது, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் 21-வது நாளை எட்டி உள்ளது.

புதிய 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர்.. இன்று அவர்கள் 21வது நாளாகவும் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Delhi Farmers struggle continues for the 21th day today

ஒருபக்கம் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் திரண்டு வருகின்றனர்.. மற்றொரு பக்கம், டெல்லியை அடையும் சாலைகளையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கு நடுவில், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் டெல்லியே திணறி வருகிறது.

டெல்லியின் எல்லைகளில் போராடும் விவசாயிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இதனால் போக்குவரத்து மற்றும் பொருளாதார பிரச்னைகள் ஏற்படுவதாகவும், மக்கள் அவரசத்திற்கு செல்ல முடியாமல் பாதிப்படைவதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வருகிறது.

மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது என்றும், ஒட்டுமொத்த மோடி ஆட்சிக் காலம் முழுவதுமே போராட்டத்தை தொடரவும் தயார் என்றும் விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.. இதனிடையே, டெல்லி - நொய்டா சாலையை அடைத்து இன்று மறுபடியும் மறியலில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.. எனினும் விவசாயிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி வருகிறது.. விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்.. ஜியோவுக்கு நெருக்கடி.. ஏர்டெல், வோடபோன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு விவசாயிகள் போராட்டம்.. ஜியோவுக்கு நெருக்கடி.. ஏர்டெல், வோடபோன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

குஜராத்தில் நேற்று பிரதமர் பேசும்போது,கடந்த காலங்களில் விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிசகளும் தொடர்ந்து வைத்த கோரிக்கைகளை நைறைவேற்றும் வகையிலேயே புதிய வேளாண் திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் கவலைகளை துடைப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அந்த வகையில், இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை தொடரபாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

English summary
Delhi Farmers struggle continues for the 21th day today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X