டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

102 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு திட்டங்கள்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் 102 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முதலீடு செய்யப்படும் என்றும் 2020ம் ஆண்டின் பிற்பாதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நாட்டின் பொருளாதார மந்தநிலை நிலவி வரும் உள்நிலையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் செவ்வாயக்கிழமையான இன்று பிற்பகல் 3மணி அளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தனியா குழு

தனியா குழு

அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி சுதந்திர தின உரையில் கூறியபடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 லட்சம் கோடி செலவிடப்படும். இதற்காக தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நான்கு மாத காலத்திற்குள் 70 பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை நடத்திய பின்னர் ரூ .2.10 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது.

என்ஐபி வழிமுறை

என்ஐபி வழிமுறை

தேசிய உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய உள்கட்டமைப்பு குழாய் (என்ஐபி) ஒருங்கிணைப்பு வழிமுறை தொடங்கப்பட உள்ளது. இதன்படி மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார்களை உள்ளடக்கி, விரிவான திட்டமிடல், தகவல் அளித்தல் மற்றும் கண்காணிப்பை செயல்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

2020ல் நடைபெறும்

2020ல் நடைபெறும்

2020ம் ஆண்டு பிற்பாதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த தேசிய உள்கட்டமைப்பு குழாய்த்திட்டத்தில் மேலும் ரூ .3 லட்சம் கோடி திட்டங்கள் சேர்க்கப்படலாம் .

39 சதவீதம் அரசுகள்

39 சதவீதம் அரசுகள்

கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநிலங்கள் ரூ .51 லட்சம் கோடிக்கு மேல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளன. மத்திய மற்றும் மாநிலங்கள் தலா 39 சதவீத திட்டங்களையும், மீதமுள்ள 22 சதவீதத்தை தனியார் மூலமும் மேற்கொள்ளப்பட உள்ளது.

எரிசக்தி துறை

எரிசக்தி துறை

தேசிய உள்கட்டமைப்பு குழாய் திட்டத்தின் மூலம் மின்சாரம், ரயில்வே, நகர்ப்புற நீர்ப்பாசனம், இயக்கம் ( mobility), கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும். ஏறக்குறைய ரூ .25 லட்சம் கோடி எரிசக்தி திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. ரூ .20 லட்சம் கோடியில் சாலையும், கிட்டத்தட்ட ரூ .14 லட்சம் கோடி மதிப்பில் ரயில் திட்டங்களும் அமைக்கப்படுகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

2025 ஆம் ஆண்டில் இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற ரூ .2.10 லட்சம் கோடி தேசிய உள்கட்டமைப்பு திட்டங்கள் உதவும்" இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

English summary
Finance Minister Nirmala Sitharaman to address the media at 3 pm, today on delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X