டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி தீ விபத்து.. 11 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ 'தீயணைப்பு வீரர் ராஜேஸ் சுக்லா'! அமைச்சர் நன்றி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ராஜேஷ் சுக்லா என்ற தீயணைப்பு வீரர் மட்டும் உயிரை பணையம் வைத்து 11 பேரை பத்திரமாக மீட்டார், அவர் மட்டும் இல்லையென்றால் இன்னும் அதிகமானோர் உயிரிழந்திருப்பார்கள். இந்த விபத்தில் ராஜேஸ் சுக்லாவும் காயம் அடைந்திருக்கிறார்.

வடக்கு டெல்லியில் அனஜ் மண்டியில் உளள பை தயாரிக்கும் தொழிற்சாலையில் அங்கேய தங்கி ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று இரவு 100க்கும் மேற்பட்டோர் அங்கு தூங்கிய நிலையில் மறு நாள் அவர்களுக்கு மரணம் காத்திருக்கிறது என்று தெரியாது.

அதிகாலை 5 மணி அளவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. மிக குறுகிய அந்த இடத்தில் பை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் அதிக அளவு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோர விபத்தை பார்த்த ஊழியர்கள் தப்பிக்க போராடியுள்ளார்கள்.

 மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

அப்போது அவர்களால் கதவை திறந்து வெளியே செல்ல முடியவில்லை. தீ மளமளவென பரவி பலரும் கருகிக்கொண்டு இருந்தனர். மூச்சுத்திணறால் மயங்கி சிலர் இறந்து கொண்டிருந்தார்கள். இந்த விபத்தை அறிந்து 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. முதலில் வந்தது ராஜேஸ் சுக்லா என்ற தீயணைப்பு வீரரின் வண்டி தான்.

 11 பேர் மீட்பு

11 பேர் மீட்பு

ராஜேஸ் சுக்லா எதற்கும் காத்திருக்காமல் தீ எரிந்து கொண்டிருந்த பேக்டரிக்குற்குள் நுழைந்து தன் உயிரை துச்சமாக மதித்து 11 பேரை உயிருடன் மீட்டார். மற்றவர்கள் தீயில் கருகியும், புகையால்மூச்சு திணறல் ஏற்பட்டும் படுகாயம் அடைந்தனர்..

 20பேர் காயம்

20பேர் காயம்

இந்த கோரவிபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 20க்கும மேற்பட்டோர் பலத்த தீக்காயங்ளுடன் மீட்கப்பட்டனர். சுமார் 50 பேர் வரை இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டனர்.

 நன்றி தெரிவித்தார்

நன்றி தெரிவித்தார்

தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் 1 பேரை மீட்க காரணமாக இருந்த ராஜேஸ் சுக்லா தான் ரியல் ஹீரோ என பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். காயமடைந்து எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜேஸ் சுக்லாவை டெல்லி மாநில உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், நன்றி தெரிவித்தார்.

 ரியல் ஹீரோ

ரியல் ஹீரோ

தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா ஒரு உண்மையான ஹீரோ. தீயணைப்பு இடத்திற்கு நுழைந்த முதல் தீயணைப்பு வீரர் அவர் 11 உயிர்களைக் காப்பாற்றினார். அவருக்கு கடும் காயங்கள் இருந்தபோதிலும் அவர் கடைசி வரை தனது வேலையைச் செய்தார். இந்த துணிச்சலான ஹீரோவுக்கு வணக்கம்" என்று சத்யேந்திர ஜெயின் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் சுக்லாவுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

நீதி விசாரணை

தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும் என்றும காயமடைந்தவர்களுக்கு ரூ .1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட டெல்லி அரசு ஏழு நாட்களுக்குள் அறிக்கை கோரியுள்ளது.

English summary
Rajesh Shukla, a firefighter to enter the building in north Delhi's Anaj Mandi, saved 11 people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X