டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனைத்தும் தள்ளுபடி.. கெஜ்ரிவால் அறிவித்த பம்பர் பரிசு.. டெல்லி மக்கள் செம ஹேப்பி!

Google Oneindia Tamil News

Recommended Video

    கெஜ்ரிவால் அறிவித்த பரிசு.. டெல்லி மக்கள் செம ஹேப்பி!- வீடியோ

    டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிவாசிகளுக்கு பெரிய கிஃப்ட்டை வழங்கியுள்ளார். கெஜ்ரிவாலின் இந்த அதிரடி அறிவிப்பால், மொத்தம் 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் அரசுக்கும் இழப்பு ஏற்படாதாம். மீட்டர்கள் சீர் செய்யப்படுவதால், 600 கோடி ரூபாய் வருமானமானமாக அரசுக்கும் கிடைக்கும். மக்களுக்கும் லாபம் என்கிறார், கெஜ்ரிவால்.

    அப்படி என்ன அறிவிப்பு அது என்கிறீர்களா? இன்று செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கிய அந்த முக்கிய அறிவிப்பு குறித்த தகவல் இதுதான்.

    3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்ததும் மோடி செய்த முதல் வேலை என்ன தெரியுமா?3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்ததும் மோடி செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

    தண்ணீர் மீட்டர்

    தண்ணீர் மீட்டர்

    கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லி குடியிருப்பாளர்களுக்கான முக்கிய திட்டத்தை அளிவிக்கிறேன். தண்ணீர் மீட்டர் செயல்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். அதாவது நிலுவை தண்ணீர் கட்டணங்களுக்கு அதிகபட்சம் 100 சதவீதம் தள்ளுபடி வழங்கப்ப்டும். தள்ளுபடி திட்டம் வரும் நவம்பர் 30 வரை செயல்பாட்டில் இருக்கும்.

    பிரிவுவாரியாக சலுகை

    பிரிவுவாரியாக சலுகை

    2019ம் ஆணடு மார்ச் 31 வரை பில்தொகை நிலுவையில் வைத்துள்ளவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். இ, எப், ஜி, மற்றும் எச் பிரிவுகளின் கீழ் வரும் 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ளுக்கு 100 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்றும், ஏ மற்றும் பி பிரிவில் உள்ளவர்களுக்கு 25 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். சி வகை நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி பெறுவார்கள்.

    கடிதம்

    கடிதம்

    டெல்லியில் உள்ள அனைத்து குடிநீர் நுகர்வோருக்கும் நான் கடிதங்களை எழுத உள்ளேன். நிலுவைத் தொகை தள்ளுபடி குறித்த அறிவிப்பை அதில் தெரிவிக்க உள்ளேன். இந்த தள்ளுபடி திட்டத்தைப் பெற விரும்புவோர் தங்கள் வீடுகளில் குடிநீர் மீட்டர்களை நிறுவுவது கட்டாயம். மீட்டர் குறித்து குடிநீர் வாரியத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த சலுகை நடவடிக்கையால் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட டெல்லி குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    சட்டமன்ற தேர்தல்

    சட்டமன்ற தேர்தல்

    டெல்லி சட்டசபைக்கு வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் பொதுத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, வாக்காளர்களை கவர, தனது தேர்தல் வாக்குறுதியின் ஒரு அம்சமான, குடிநீர் கட்டண தள்ளுபடி அஸ்திரத்தை, கெஜ்ரிவால் இப்போது எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    English summary
    Chief Minister Arvind Kejriwal gave a big gift to the residents of Delhi by giving a press conference on Tuesday. They have forgiven the old water bills. In a press conference held at the Delhi Secretariat, Kejriwal said that when we took power in Delhi in 2015, there was a bad condition of water. We have made many improvements in the last 5 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X