டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவு- பாஜக ரூ5 லட்சம் நிதி உதவி

Google Oneindia Tamil News

டெல்லி: 43 பேரை பலி கொண்ட தீ விபத்து குறித்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஜான்சி ராணி சாலையில் ஸ்கூல் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

Delhi govt. orders probe in Delhi fire incident

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

இந்நிலையில் இத் தீ விபத்து குறித்து விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்டெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இதனிடையே தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவியை வழங்கப்படும் என்று டெல்லி பாஜக தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

அதேபோல் இவ்விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் நி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

English summary
Delhi govt. ordered a probe in the Delhi fire incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X