டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா சோதனை - சமூக பரவலா? என்பது குறித்து ஆய்வு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் டெல்லியில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக தொடங்கிவிட்டதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் டெல்லி 3-வது இடத்தில் இருந்து வருகிறது. டெல்லியில் மொத்தம் 33,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Delhi Govt to assess if there is community transmission in Capital

டெல்லியில் 289 பேர் கொரோனாவால் இதுவரை பலியாகி உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.

கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமலால் அரவிந்த் கெஜ்ரிவால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை.

Recommended Video

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா சோதனை

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு என்பது சமூக பரவலாக மாறிவிட்டதா? என்பது குறித்து அம்மாநில அரசு இன்று ஆய்வு நடத்த உள்ளது.

    அமெரிக்காவைவிட பிரேசிலில் ஒருநாள் கொரோனா மரணங்கள் அதிகம்! அமெரிக்காவைவிட பிரேசிலில் ஒருநாள் கொரோனா மரணங்கள் அதிகம்!

    டெல்லி துணை முதல்வர் சிசோடியா இது தொடர்பாக கூறுகையில், டெல்லி பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று கொரோனா என்பது சமூகப் பரவலாகிவிட்டதா? என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளனர். அப்படி சமூகப் பரவலாக மாறி இருந்தால் அதற்கேற்ப நாங்கள் நடவடிக்கையை மாற்றுவோம் என கூறியிருக்கிறார்.

    English summary
    Delhi Govt will assess if there is community transmission on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X