டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குர்கான் நீதிபதியின் மனைவியை தொடர்ந்து மகனும் பலி.. மூளை மரணத்தால் 10 நாட்கள் போராடிய பரிதாபம்!

ஹரியானவை சேர்ந்த குர்கான் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீதிபதியின் மனைவியை சுட்ட பாதுகாப்பு அதிகாரி-வீடியோ

    டெல்லி: ஹரியானவை சேர்ந்த குர்கான் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். சுடப்பட்ட இருவரும் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அந்த நீதிபதியின் மனைவி ரீத்து, மகன் துருவ் மரணம் அடைந்துள்ளனர். ஹரியானா மாநிலம் குர்கான் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருக்கிறார் கிருஷ்னன் காண்ட் சர்மா.

    இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரியே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    கொடூரமான மஹிபால் சிங்

    கொடூரமான மஹிபால் சிங்

    அந்த நீதிபதியின் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டு இருந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங்தான் இந்த கொடூர செயலை செய்தது. போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் இரண்டு வருடமாக அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். பொது இடத்தில் மார்க்கெட்டில் வைத்து 10 நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது. அந்த போலீஸ் அதிகாரி, அந்த இருவரையும் சுடும் முன் மோசமாக தாக்கி உள்ளார்.

    [நாய் போல நடத்தினார்கள்.. சுட்டேன்.. குர்கான் நீதிபதியின் மனைவி மகனை சுட்ட அதிகாரி பரபரப்பு!
    ]

    மரணம் அடைந்தார்

    மரணம் அடைந்தார்

    துப்பாக்கி சூடு நடந்த இரண்டாவது நாளே நீதிபதியின் மனைவி ரீத்து பலியானார். இதயத்தில் பாய்ந்த குண்டு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டு உள்ளது. நிறைய ரத்த போக்கு ஏற்பட்ட காரணத்தால் உயிர்பிழைக்க வைக்க முடியவில்லை என்று தகவல் வந்துள்ளது. மகன் மட்டும் சிகிச்சை பெற்று வந்தார்.

    சிகிச்சை பெற்று வந்தார்

    சிகிச்சை பெற்று வந்தார்

    தலைக்கு அருகே குண்டடி பட்ட நீதிபதியின் மகன், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இவர் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. தொடர்ந்து உடல்நிலையில் நலிவு ஏற்பட்டு வந்தது. சுடப்பட்ட இரண்டாவது நாள் இவருக்கு மூளை மரணம் ஏற்பட்டது.

    பரிதாபம்

    பரிதாபம்

    இந்த நிலையில் 10 நாள் சிகிச்சைக்கு பின் இன்று துருவ் பலியானார். மூளை இறப்பை தொடர்ந்து எதுவும் சிகிச்சை அளித்து பலனளிக்கவில்லை. இன்று காலை துருவ் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    Delhi Gurgaon Shoot: Judge's son also declared dead after 10 days of treatment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X