டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த பொறி.. வலையில் மாட்டிய சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா.. லஞ்ச வழக்கில் கிடுக்குபிடி!

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை 10 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முற்றுகிறது மோதல்... அலோக் வெர்மா ராஜினாமா!- வீடியோ

    டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை 10 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நேற்று சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். இதையடுத்து நேற்று சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போது சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான லஞ்ச வழக்கை 10 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    என்ன அலோக் வெர்மா

    என்ன அலோக் வெர்மா

    சிபிஐ சிறப்பு இயக்குனரின் இந்த வழக்குதான், சிபிஐ அமைப்பிற்குள் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் காரணம். இதை விசாரிக்க போய்தான் சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வெர்மா சிக்கலில் மாட்டியுள்ளார். குஜராத்தை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது. இதில் அவர் பண மோசடி மற்றும் வரி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சிக்கினார்.

    லஞ்ச வழக்கு

    லஞ்ச வழக்கு

    குரேஷியிடம் இருந்து அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக அலோக் வெர்மா குற்றச்சாட்டு வைத்தார். இதனால் அலோக் வெர்மா அப்போதே அஸ்தானா அலுவலகத்தில் சோதனை நடத்தினார். அதன்பின் சிபிஐ அஸ்தானா மீது லஞ்ச வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த பிரச்சனை பெரிதாகிதான் பின்னர் இருவரும் சண்டை போட, கடைசியில் இருவரும் மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    வழக்கு தொடுத்தார்

    வழக்கு தொடுத்தார்

    ஒரு பக்கம் அலோக் வெர்மாவின் வழக்கு போய் கொண்டு இருந்தது. இன்னொரு பக்கம் ராகேஷ் அஸ்தானா தனக்கு எதிரான லஞ்ச புகாருக்கு எதிராக டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த லஞ்ச வழக்கும் சிபிஐ துணை ஆய்வாளர் தேவேந்தர் குமார், மனோஜ் குமார் என்ற வியாபாரி ஆகியோர் மீதும் பதியப்பட்டது. இந்த வழக்கில்தான் டெல்லி ஹைகோர்ட் இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

    உத்தரவு

    உத்தரவு

    அதன்படி சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை 10 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய தேவைப்பட்டால் கைது செய்யலாம் என்றும் கூறியுள்ளது. அஸ்தானா இந்த விசாரணைக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

    English summary
    Delhi HC orders probe against CBI No. 2 The special Director, Rakesh Asthana for bribe case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X