டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து தீவிரவாதி.. கமல் கருத்துக்கு எதிராக பாஜக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் பேசியதை கண்டித்து தாக்கல் செய்த மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.

அரவக்குறிச்சி மநீம வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Delhi HC rejects plea against Kamalhaasan

இதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கமல் பேச்சை எதிர்த்து பாஜகவின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேட்டனர். இதற்கு மனுதாரர் கூறுகையில் கமல் பேசியது கடுமையான தேர்தல் விதிமீறல் என்பதால் டெல்லியை அணுகியதாக மனுதாரர் பதில் அளித்துள்ளார்.

சர்ச்சை பேச்சுக்கு பின்னர்.. பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் சென்ற கமல்... மீண்டும் பிரச்சாரம் சர்ச்சை பேச்சுக்கு பின்னர்.. பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் சென்ற கமல்... மீண்டும் பிரச்சாரம்

கமல் மீதான புகாரை ஆய்வு செய்து வருகிறோம். கமலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் கமல்ஹாசனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தனர்.

English summary
Delhi Highcourt rejects plea against Kamal Haasan who made controversial statement on Hindu terrorism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X