டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிச்சை எடுங்க.. திருடுங்க.....எப்படியோ ஆக்சிஜன் மட்டும் கொடுங்க-மத்திய அரசை வெளுத்த டெல்லி ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை எப்படியாவது மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என மிக கடுமையான வார்த்தைகளில் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Recommended Video

    Corona நோயாளிகளுக்கு எப்படியாவது Oxygen கொண்டு வந்து கொடுங்க.. மத்திய அரசை வெளுத்த Delhi Highcourt

    நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஆக்சிஜன் கசிவால் பற்றாக்குறை ஏற்பட்டு 22 நோயாளிகள் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.

    ஹரியானாவில் ஆக்சிஜன் லாரிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆக்சிஜன் விவகாரம் மத்திய பாஜக அரசுக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் தலையிட கோரி மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    கொரோனா வழக்கு: ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை தமக்கான ஆலோசகராக நியமித்த உச்சநீதீமன்றம் கொரோனா வழக்கு: ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை தமக்கான ஆலோசகராக நியமித்த உச்சநீதீமன்றம்

    என்ன செய்கிறது மத்திய அரசு?

    என்ன செய்கிறது மத்திய அரசு?

    இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா பாட்டீல் விசாரணை செய்தனர். இந்த விசாரணையின் போது நீதிபதிகள் இருவரும் தெரிவித்த கருத்துகள்: ஆக்சிஜன் பற்றாக்குறை தேசிய அளவிலான அவசர நடவடிக்கையாகும். யதார்த்தம் என்ன என்பதை மத்திய அரசு பார்க்கவே இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. என்னதான் நடக்கிறது? எது உண்மை என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளவே இல்லை.

    நாங்க அமைதியாக இருக்க முடியாது

    நாங்க அமைதியாக இருக்க முடியாது

    கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மத்திய அரசு ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு இருக்க எங்களால் முடியாது.

    பிச்சை எடுங்க... திருடுங்க..

    பிச்சை எடுங்க... திருடுங்க..

    இறையாண்மையுள்ள ஒரு அரசானது மக்கள் மரணமடைவதை பார்த்து கொண்டிருக்க கூடாது. மக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. நேரடியாக பிச்சை எடுங்க.. கடன் வாங்குங்க.. அல்லது திருடுங்க.. எதையாவது செய்து மக்களுக்கு ஆக்சிஜனை கொடுங்க.. மக்கள் செத்துகொண்டிருப்பதை நாங்க வேடிக்கை பார்க்க முடியாது.

    ஏன் மரணங்களை குறைக்கவில்லை?

    ஏன் மரணங்களை குறைக்கவில்லை?

    மத்திய அரசு இரும்பு உருக்காலைகளை நடத்துகிறது.. பெட்ரோலியம் தொழிற்சாலைகளை வைத்திருக்கிறது.. ஆக்சிஜ்னை அதிக அளவில் உற்பத்தி செய்து மக்கள் மரணங்கள் எண்ணிக்கையை குறைக்கலாமே? அதை செய்ய வேண்டாம் என்று யார் உங்களை தடுத்தது? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    English summary
    Delhi High Court has slammed that the Centre on the oxygen Shortage in Hospitals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X