டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் - ஈபிஎஸுக்கு எதிரான கே.சி பழனிச்சாமி வழக்கு.. டெல்லி ஹைகோர்ட் அவசர வழக்காக நாளை விசாரணை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓபிஎஸ் - ஈபிஎஸுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை

    டெல்லி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட உள்ளது.

    இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு போலவே இதுவும் கையெழுத்து தொடர்பான வழக்குதான். லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிமுகாவால் தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    Delhi high court tomorrow will hear the K C Palanisamy case against OPS-EPS signature

    20 லோக்சபா வேட்பாளர்கள், 18 சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்களை நேற்றுதான் அதிமுக தேர்வு செய்தது. இதற்கான விருப்ப மனுக்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்தான் கையெழுத்திட்டனர்.

    இந்த நிலையில் இதற்கு எதிராக தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள கே.சி.பழனிசாமி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட உள்ளது.

    அதன்படி அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கையொப்பம் இட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. புதிய விதி, பழைய விதி என்று எதுவும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கைபோம் இட அதிகாரம் வழங்கவில்லை. ஆனால் அதையும் மீறி இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

    இதனால் இவர்கள் கையொப்பம் இட தடைவிதிக்க வேண்டும். இவர்கள் இட்ட கையெழுத்து செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்குதான் நாளை அவசர வழக்காக டெல்லி ஹைகோர்ட்டால் விசாரிக்கப்பட உள்ளது.

    English summary
    Delhi high court tomorrow will hear the KC Palanisamy case against OPS-EPS signature in AIADMK candidate forms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X