டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ஒரு நாள் இரவு டிரம்ப் தங்கும் ஐடிசி மவுரியா ஹோட்டல்.. சிறப்பம்சங்கள்.. கட்டணம் எவ்வளவு?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கு இன்று வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு ரூ 8 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று இந்தியா வருகிறார். அவர் பிற்பகல் 12 மணி அளவில் அகமதாபாத்திற்கு வருகை தருகிறார்.

    அங்கிருந்து சாலை மார்க்கமாக 22 கி.மீ. தூரத்திற்கு காரில் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார்.

    திறப்பு விழா

    திறப்பு விழா

    ஆசிரமத்திலிருந்து மோடி, டிரம்ப் ஆகியோர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு வருகை தரவுள்ளனர்.
    திறப்பு விழாவிற்கு 1.25 லட்சம் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பிற்கு அகமதாபாத்தில் குஜராத்தி வகை உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு மிகவும் பிடித்தமான கமான் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.

    தாஜ்மஹால்

    தாஜ்மஹால்

    இதை செஃப் சுரேஷ் கன்னா தயார் செய்துள்ளார். உணவு இடைவேளைக்கு பிறகு, ஆக்ராவில் கெரியா விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலுக்கு செல்கிறார். ரம்மியமான யமுனை நதிக் கரையில் காதல் சின்னமான யமுனை நதிக் கரையில் உள்ள தாஜ்மஹாலில் நேரம் செலவிடுகின்றனர்.

    சாணக்கியா சூட்

    சாணக்கியா சூட்

    இதையடுத்து டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஹோட்டலில் டிரம்ப் தனது குடும்பத்தினருடன் தங்குகிறார். இந்த ஹோட்டல் சர்தார் படேல் மார்க் பகுதியில் உள்ளது. இவர்கள் தங்கும் சொகுசு அறைகள் ஹோட்டலின் 14-ஆவது தளத்தில் உள்ளது. அதற்கு கிராண்ட் பிரசிடென்சியல் சூட் அல்லது சாணக்கியா சூட் என்பதாகும்.

    பிடித்த உணவுகள்

    பிடித்த உணவுகள்

    இங்கு பட்டால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், மரத்தினாலான தரைகள், பிரமிக்கும் கலை வேலைப்பாடுகள், ஒரு பெரிய ஹால், மயில் வடிவிலான 12 சீட்டுகள் கொண்ட தனி டைனிங் அறை, சொகுசு கழிவறை, சிறிய ஸ்பா, ஜிம், வரவேற்பறை ஆகியன இருக்கும். அத்தோடு டிரம்பிற்கு பிடித்தமான உணவுகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    4 ஆவது அதிபர்

    4 ஆவது அதிபர்

    அவருக்கு மிகவும் பிடித்தது டயட் கோக், செர்ரி வெண்ணிலா ஐஸ் கிரீம் ஆகியனவாகும். டிரம்பிற்கும் அவரது மனைவிக்கும் சமைத்து கொடுக்க தனி சமையலர் ஒருவர் ஒதுக்கப்பட்டுள்ளார். ஐடிசி மவுரியாவில் தங்கும் அமெரிக்க அதிபர்களில் டிரம்ப் 4ஆவது அதிபராவார். முன்னதாக பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோர் தங்கியுள்ளனர்.

    English summary
    US President Donald Trump is going to be staying in Delhi itc maurya costs Rs 8 lakh for a night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X