டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஏன் ஹேக் செய்ய முடியாது.. டெல்லி ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்யவோ, முறைகேடு செய்யவோ வாய்ப்பே இல்லை என ஐஐடி பொறியியல் பட்டதாரியும், டெல்லியைச் சேரந்த ஐஏஎஸ் அதிகாரியுமான பவேஷ் மிஸ்ரா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களை வெல்லும் என தேசிய ஊடகங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஹேக் செய்து முறைகேடு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவிபாட் ஒப்புகைசீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றன.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி பவேஷ் மிஸ்ரா கேள்வி பதில் இணையதளத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏன் ஹேக் செய்ய முடியாது என்பது பற்றியும். எப்படி தேர்தலில் அவை பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதை இப்போது பார்க்கலாம்.

மன்மோகன்சிங், ப.சிதம்பரம், குலாநம்பி ஆசாத்.. காங்.-ன் பிரதமர் வேட்பாளர்கள் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், குலாநம்பி ஆசாத்.. காங்.-ன் பிரதமர் வேட்பாளர்கள்

வாக்கு இயந்திரங்கள்

வாக்கு இயந்திரங்கள்

நான் தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலின் போது பத்ராச்சலம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்ற கதையை உங்களுக்கு விவரிக்கிறேன். அதன்பிறகு ஹேக் செய்ய முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தேர்தல் அறிவித்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(ஈவிஎம்) பெல் நிறுவனத்திடம் இருந்து பெற்று மாவட்ட தலைமை அலுவலத்தில் வைத்தோம். அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் அங்குள்ள ஸ்டோர் ரூமில்தான் வைக்கப்பட்டன. ஒவ்வொரு முறை வாக்கு இயந்திரம் உள்ள அறைகள் திறக்கப்படும் போதும் அனைத்து கட்சிகளும் உடன் இருப்பார்கள். அந்த மிஷின் உள்ள கட்டடத்தை சுற்றி 24 மணிநேரமும் போலீசார் காவலுக்கு இருப்பார்கள். சிசிடிவி கேமராவும் கண்காணித்து கொண்டு இருந்தது.

தேர்தல் பார்வையாளர்

தேர்தல் பார்வையாளர்

அதன் பிறகு 3 வாரங்கள் கழித்து பத்ராச்சலம் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகள் முன்னிலையில் வைக்கப்பட்டன. இதனை வீடியோ எடுக்கப்படுவதோடு சிசிடிவியும் கண்காணிக்கும். தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் போது எந்த வாக்குச்சாவடிக்கு மிஷின்கள் செல்லப்போகின்றன என்பதை தேர்தல் பார்வையாளர் அரசியல் கட்சியினரின் முன்னிலையில் இரண்டாவது முறையாக திறந்து அறிவிப்பார். உதாரணமாக BCUEH61401 என்ற வாக்கு இயந்திரம் பிஎஸ் நம்பர் 1க்கு அதாவது பத்ராச்சலம் சட்டமன்ற தொகுதி வாலேடு மண்டல் கிருஷ்ணாபுரத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த லிஸ்ட் அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

விவிபாட் செக்கிங்

விவிபாட் செக்கிங்

தேர்தல் நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் முன்பு அனைத்து கட்சிகள் முன்னிலையில் ஒவ்வொரு மிஷினிலும் ஓட்டுப்போட்டு பார்த்தார்கள். அதன்படி அந்த மிஷின் ஓட்டு யாருக்கு போடுகிறோமோ அவர்களுக்கே விழுகிறதா என்பதை செக் செய்தார்கள் இதேபோல் ஒரு மிஷினில் 1000 ஓட்டு போட்டு அதற்கான சிலிப் விவிபாட்டி சரியாக காட்டுகிறதா என்பதை சோதிப்பார்கள். இவை எல்லாம் சரியாக இருந்த பின்னரே இயந்திரங்கள் சீல்வைத்து வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சீல் வைக்கும் அனைத்து கட்சியினரும் உடன் இருப்பார்கள். ஒவ்வொரு சீலும் தனிப்பட்ட நம்பர் ஆகும். யாராவது சீலை உடைத்தால் உடனே தெரிந்துவிடும்.

தேர்தலின் போது

தேர்தலின் போது

தேர்தல் நாளின் போது 4முதல் 5 தேர்தல் அதிகாரிகள் உள்ளே இருப்பார்கள். அவர்கள் வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் முன்பு அந்த மிஷினில் குறைந்த பட்சம் 50மாதிரி ஓட்டுக்களை போடுவார்கள். இவை சரியாக விழுகிறதா என்பதை அனைத்து கட்சி பூத் ஏஜெண்களும் பார்க்க முடியும். மிஷின் சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்தே தேர்தலை ஆரம்பிப்பார்கள். இந்த மாதிரி ஓட்டுகள் அரசியல் கட்சிகள் முன்னியிலையில் அழிக்கப்படும்.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

தேர்தல் முடிந்த பின்னர் அனைத்து கட்சி பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்படும். அதன்பிறகு அவை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு குடவுனில் வைக்கப்படும். அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். போலீசாரும் 24 மணிநேரம் பாதுகாப்பில் இருப்பார்கள். இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக உள்ளன என்பதை வேறு ஒருஅறையில் இருந்தபடி அரசியல்கட்சிகள் எல்இடி ஸ்கிரினில் பார்க்க முடியும். இதற்கான வேலைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவு நாள்

தேர்தல் முடிவு நாள்

ஒரு முறை இயந்திரங்கள் சீல் செய்யப்பட்டால் அவை வாக்கு எண்ணிக்கை நாள் அன்று தான் திறக்கப்படும்.அதன்படி அரசியல் கட்சியினரின் முனனிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட்டு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

பரிசோதனை

பரிசோதனை

அப்போது இயந்திரங்கள் எங்கிருந்து வந்தவை. என்பதை வேட்பாளர்கள் பட்டியல் வைத்து பரிசோதிப்பாரகள். இதேபோல் சீல் மற்றும் டேக் அப்படியே உள்ளது. வாக்குப்பதிவு நாளில் எவ்வளவு ஓட்டுக்கள் அந்த மிஷினில் போட்டப்பட்டது என்பது செக் செய்வார்கள் அன்றைக்கு எண்ணிக்கையே இன்றும் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வார்கள். அதன் பிறகு வாக்கு இயந்திரங்களில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஒப்புகை சீட்டு எண்ணிக்கை

ஒப்புகை சீட்டு எண்ணிக்கை

இத்துடன் அரசியல் கட்சிகள் சொல்லும் ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான விவிபாட் மிஷின வாக்குகளை பரிசோதிக்க சொன்னால் அவையும் பரிசோதித்து காட்டப்படும். அப்போது வாக்கு இயந்திர முடிவுகளும் வாக்கு ஒப்புகை சீட்டு முடிவுகளும் சரியாக இருக்கும்" இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
lok sabha elections result 2019 : Delhi IAS officer Bhavesh Mishra explains in detail why EVMs can’t be ‘hacked’ or ‘tampered’ with
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X