டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ஏற்கனவே 2வது அலை ஆரம்பிச்சிருச்சாம்.. நிபுணர்கள் சொல்கிறார்கள்.. கெஜ்ரிவால் கவலை

டெல்லியில் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவைரஸின் 2வது அலை ஆரம்பித்து விட்டதாக நிபுணர்கள் கூறியிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்த மாதத்தில் தினசரி பாதிப்பு 4500 கொரோனாவைரஸ் கேஸ்களாக இருந்தது. பின்னர் பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் தற்போது தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 4000 தாண்ட ஆரம்பித்துள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Delhi is facing 2nd wave of Corona spread says CM

இது இரண்டாவது அலையின் அறிகுறியாகும் இது என்று நிபுணர்கள் கூறுவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் 2வது அலை பதிவாகவில்லை. நாட்டிலேயே டெல்லியில்தான் 2வது அலை முதன் முறையாக பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில்தான் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அங்கு இதுவரை 12 லட்சத்து 63 ஆயிரத்து 799 கேஸ்கள் பதிவாகியுள்ளன. டெல்லி 2 லட்சத்து 56 ஆயிரத்து 789 கேஸ்களுடன் 5வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பேசுகையில், "டெல்லியில் கொரோனாவைரஸின் 2வது அலை வந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். செப்டம்பர் 16ம் தேதி டெல்லியில் 4500 கேஸ்கள் பதிவாகின. அதன் பிறகு அது குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 3700 கேஸ்கள் பதிவாகியுள்ளன. வரும் நாட்களில் இது மேலும் குறையும் என்று கருதப்படுகிறது. டெல்லியில் இதுவரை மொத்தம் 4638 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்" என்றார் கெஜ்ரிவால்.

Delhi is facing 2nd wave of Corona spread says CM

ஆனால் டெல்லியில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம், டெஸ்ட்டுகள் அதிகரித்திருப்பதே என்றும் அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். டெல்லியில் முதல் கேஸ் மார்ச்சில் பதிவானது. அதன் பிறகு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலையில் சற்று மட்டுப்பட்டது. ஆனால் பின்னர் அது அதிகரிக்கத் தொடங்கியது.

 அந்த நொடியில்தான் மேட்ச் மாறியது.. பெங்களூரின் ஒரே நம்பிக்கையை காலி செய்த ரவி.. யார் பாஸ் இவர்?! அந்த நொடியில்தான் மேட்ச் மாறியது.. பெங்களூரின் ஒரே நம்பிக்கையை காலி செய்த ரவி.. யார் பாஸ் இவர்?!

டெல்லியில் பல்வேறு பிரபலங்களும் கூட கொரோனாவிடமிருந்து தப்பவில்லை. துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உள்பட பல எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு தொற்று பரவியது. தற்போது சிசோடியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காய்ச்சலும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததாலும் உடல் நிலை மோசமடைந்தது.

English summary
Delhi is facing 2nd wave of Corona spread says CM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X