டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தொடர்பான சர்ச்சையான விமர்சனத்தை முன்வைத்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மனோகர்லால் கட்டார், சோனியா காந்தி குறித்து விமர்சித்தார். அவர் பேசுகையில், செத்த எலியைக் கண்டுபிடிக்க மலையை குடைவது போல புதிய தலைவரை கண்டுபிடிக்க முயற்சித்து பின்னர் கடைசியாக சோனியாவே தலைவராக்கப்பட்டுள்ளார் என்றார்.

Delhi Mahila Congress holds protest against Haryana CM over remarks on Sonia Gandhi

அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. கட்டாரின் இந்த பேச்சைக் கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்துக்கு பங்கேற்ற காங்கிரஸின் ஷர்மிஸ்தா முகர்ஜி, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் வகையில் கட்டார் விமர்சித்திருக்கிறார் என ஆவேசமாக பேசினார். ஏற்கனவே ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது, ஹரியானா அழகான ஆண்கள் காஷ்மீர்ர் பெண்களை திருமணம் செய்து அழைத்துவரலாம் என கட்டார் பேசியது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The women's wing of the Delhi Congress on Monday hold a protest against Haryana CM Khattar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X