டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன் இல்லையெனில் டெல்லியில் 1 லட்சம் பேருக்கு கொரோனா வந்திருக்கும்- அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுனை அமல்படுத்தாமல் இருந்தால் டெல்லியில் மட்டும் 50,000 பேர் முதல் சுமார் 1 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Lockdown Extension மூலம் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கலாமா?

    டெல்லியில் கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் ஒரே நாளில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    Delhi Minister Satyendar Jain speaks on Coronavirus in national Capital

    இதனால் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியிருக்கிறது. இதனிடையே இந்தியா டுடே டிவிக்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்ச சத்யேந்தர் ஜெயின் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

    அதில், கொரோனா பரிசோதனை கருவிகளை அதிக அளவில் பெறுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். டெல்லி மாநில அரசும் தனிப்பட்ட முறையில் இந்த கருவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    சிங்கப்பூரில் கொரோனா உக்கிரம்- ஒரே நாளில் 386 பேருக்கு பாதிப்பு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,918 சிங்கப்பூரில் கொரோனா உக்கிரம்- ஒரே நாளில் 386 பேருக்கு பாதிப்பு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,918

    டெல்லியில் தற்போது சமூகப் பரவல் இல்லை. டெல்யில் லாக்டவுனை அமல்படுத்தாமல் இருந்தால் கொரோனாவால் சுமார் 50,000 முதல் 1,00,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இனி வரும் 2 வார கால லாக்டவுன் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.

    English summary
    Delhi Health Minister Satyendar Jain said In Delhi, there would have been 50,000 to 1 lakh cases if the lockdown was not imposed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X