டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் பொறுத்துக் கொள்ள முடியாத காற்று மாசு.. சுகாதாரத் துறை அமைச்சர் வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    No 'good air' in national capital | டெல்லியில் பொறுத்துக் கொள்ள முடியாத காற்று மாசு !

    டெல்லி: வடஇந்தியாவில் காற்று மாசு பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

    டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதன் புள்ளிகள் 900 உள்ள 8 இடங்களில் மூச்சுதிணறல் ஏற்பட்டது. புகை மண்டலமாக காட்சியளித்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

    ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களில் இயக்கும்படியான வாகன கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் காற்று மாசை கட்டுப்படுத்தலாம் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசா?.. சென்னை எங்க இருக்கு?.. டெல்லி எங்க இருக்கு?.. அதெல்லாம் ஏற்படாது!.. வானிலை மையம்காற்று மாசா?.. சென்னை எங்க இருக்கு?.. டெல்லி எங்க இருக்கு?.. அதெல்லாம் ஏற்படாது!.. வானிலை மையம்

    தவிருங்கள்

    பள்ளிகள் நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டும் பணிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன. இதுகுறித்து டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில் காலையிலும் மாலையிலும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து விடுங்கள்.

    பொறுக்க முடியவில்லை

    பொறுக்க முடியவில்லை

    முகமூடி அணிந்து கொள்ளுங்கள். மாசான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். வீடுகளில் உள்ள ஜன்னல், கதவுகளை எல்லாம் மூடி வையுங்கள். வட இந்தியாவில் காற்று மாசு பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஏற்பட்டுவிட்டது என்றார்.

    காற்றில் கலந்தது

    காற்றில் கலந்தது

    இந்த காற்று மாசு அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடைக்கு பிறகு உள்ள மிச்சம் மீதி பயிர்களை எரிப்பதாலேயே நிகழ்கிறது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளில் இருந்து வெளியான கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு ஆகியன காற்றில் கலந்தது.

    மரணங்கள்

    மரணங்கள்

    டெல்லியில் உள்ள காற்று மாசு சீன தலைநகர் பெய்ஜிங்கை விட 7 மடங்கு அதிகமாக உள்ளதாகவே கருதப்படுகிறது. காற்று மாசால் பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றால் மரணங்கள் நிகழ்வதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Delhi Health Minister says that India is facing unbearable levels of Air pollution.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X