டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடி வயிற்றில் எட்டி உதைத்த மதவெறி கும்பல்.. அலறி துடித்த சபானா பர்வீன்.. பிறந்தது 'மிராக்கிள் பேபி'

Google Oneindia Tamil News

டெல்லி: அது டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கராவல் நகர் பகுதி. திங்கள்கிழமை நள்ளிரவு. வழக்கமான ஒரு இரவாகத்தான் இது கழியும் என்ற நினைப்போடுதான், படுக்கைக்கு சென்றார், 30 வயதாகும் சபானா பர்வீன்.

Recommended Video

    கலவரத்தில் தன் உயிரை பணயம் வைத்து இஸ்லாமியரை காப்பாற்றிய இந்து நபர்

    சரிந்து படுத்தால் கஷ்டப்படும் அளவுக்கு வயிறு தள்ளிக் கொண்டு இருந்தது அவருக்கு. வயிற்றுக்குள் ஒரு குட்டிப்பையன் கை காலை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தான். ஆம்.. பர்வீன் நிறைமாத கர்ப்பிணி.

    "செல்லம்.. ஓடாதடா.. அம்மாவுக்கு வலிக்குது பாரு.." என செல்லமாக வயிற்றை தட்டிக் கொடுத்தபடியே, இமைகளை உயர்த்தி பார்த்தார், அங்கே, தனது இரு குழந்தைகளும், கணவரும் ஏற்கனவே தூங்கத் தொடங்கியுள்ளதை உறுதி செய்து கொண்டார். வெளியே மாமியார் உருண்டு படுக்கும் சத்தமும் கேட்டது.

     நீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர் நீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்

    நள்ளிரவு

    நள்ளிரவு

    ஆம்.. பர்வீனின் மொத்த குடும்பமும் அப்போது நித்திரையை தழுவியிருந்தது. அப்படியே மெல்ல மெல்ல கண்ணயர்ந்தார் பர்வீன். வயிற்றுக்குள் கை, காலை அடித்து விளையாடிய பிஞ்சும் தனது தாய்க்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்பதை உணர்ந்து அமைதி காக்க ஆரம்பித்தது. அப்படியே அந்த இடத்தில் நிசப்தம் நிலவியது.

    உடைந்த கதவு

    உடைந்த கதவு

    கொஞ்ச நேரம்தான் இருக்கும்.. திபு திபுவென ஒரே சத்தம்.. டமார் என கதவு உடைக்கப்படும் சத்தம் அதைத் தொடர்ந்து காதை பிளந்தது. அதிர்ச்சியில் கண் விழித்தார் பர்வீன். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர அவருக்கு அதிக நொடிகள் தேவைப்படவில்லை. வீட்டிலிருந்த அனைவரும் அலறியடித்து எழுந்தனர். இப்போது கதவு உடைக்கப்படும் சத்தம் நின்றிருந்தது. ஏனெனில், உடைத்தவர்கள் ஏற்கனவே வீட்டுக்குள் வந்திருந்தனர்.

    வயிற்றில் விழுந்த மிதி

    வயிற்றில் விழுந்த மிதி

    கண்ணிமைக்கும் நேரத்தில், குடும்பத்திலுள்ள அத்தனை பேரையும் கண்மூடித்தனமாக தாக்கியது, அந்த கும்பல். கர்ப்பிணி என்றும் பார்க்கவில்லை. அதில் ஒருவன், பர்வீன் அடிவயிற்றில் தனது காலால் ஓங்கி மிதித்தான். அய்யோ.. அம்மா.. என அலறிச் சாய்ந்தார் பர்வீன். துடித்துப்போனது மொத்த குடும்பமும். ஆனால், எதுவும் செய்ய முடியவில்லை. கண்களில் கொலைவெறியுடன், பெரும் வன்முறை கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து நடத்தும் தாக்குதலுக்கு பதில் சொல்ல, அங்கே யாருக்கும் உடலில் தெம்பு இல்லை.. மனதிலும்தான்!

    எரிக்கப்பட்ட வீடு

    எரிக்கப்பட்ட வீடு

    அடுத்த சில நிமிடங்கள் நரக வேதனையாக மாறின. மொத்த வீடும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வயிற்றை பிடித்தபடியே, அலறித் துடித்து வெளியே வந்து விழுந்தார் பர்வீன். வீடு பற்றி எரிந்ததை 'கண் குளிர' பார்த்தது அந்த கும்பல். அந்த சந்தோஷத்திலோ என்னவோ, மெல்ல நகர்ந்து சென்றனர். வலியால் துடித்த பர்வீனை, அவர் குடும்பத்தார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினர். ஐயோ.. என் மனைவி.. ஐயோ என் குழந்தை.. என கதறி துடித்தார், பர்வீன் கணவர். ஆனால், பேசவும் வாய் எடுக்க முடியாத வலியில் துடித்த பர்வீனுக்கு, கண்ணீரை மட்டுமே பதிலாக தர முடிந்தது.

    மிராக்கிள்

    மிராக்கிள்

    ஆனால், அதிசயம் என்று சொல்வார்களே அது நிகழ்ந்தது. அல்-ஹிந்த், மருத்துவமனையில், சபானா பர்வீனுக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய்க்கும், குழந்தைக்கும், எந்த ஒரு ஆபத்தும் இல்லை என கூறிவிட்டனர், மருத்துவர்கள். எனவேதான், அந்த குட்டிக் குழந்தையை, மொத்த குடும்பம் மட்டுமல்லாது, மருத்துவமனையில் அனைவருமே, 'மிராக்கிள் பேபி' என்று அழைத்து மகிழ்கிறார்கள்.

    கடவுளுக்கு நன்றி

    கடவுளுக்கு நன்றி

    நடந்த சம்பவத்தை இப்படி விவரிக்கிறார், பர்வீனின் மாமியார் நஷிமா: அவர்கள் என் மகனை அடித்தார்கள். அவர்களில் சிலர் என் மருமகளை அடிவயிற்றில் கூட உதைத்தார்கள்... நான் அவரைப் பாதுகாக்கச் சென்றபோது அவர்கள் என்னையும் உதைத்தனர்... அந்த இரவை நாங்கள் தாண்ட மாட்டோம் என்றுதான், நினைத்தோம், ஆனால் இறைவனின் பேரருளால், நாங்கள் எப்படியோ கலகக்காரர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முடிந்தது. 20 வருடங்களாக அங்கேதான் வசித்தோம். இப்போது எல்லா உடமைகளையும் இழந்துள்ளோம். ஆனால், இந்த 'அதிசயக் குழந்தை' பிறந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்" என்கிறார், கண்ணீரை துடைத்தபடி.

    English summary
    It was nothing short of a miracle for 30-year-old Shabana Parveen, as she gave birth to a baby boy, after surviving a murderous attack by rioters who kicked and assaulted her in Northeast Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X