டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி கூட்டத்தால் கொரோனா.. கோவை, ஈரோடு மாவட்டத்தில் சல்லடை போட்டு தீவிரமாக தேடும் சுகாதாரத்துறை

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியின் நிஜாமுதீனில் மார்ச் 13 முதல் 15 வரை ஒரு மத சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தமிழ்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஏராளமானனோர் இந்த லிஸ்டில் இருப்பதால் கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    டெல்லி நிஜாமுதினில் உள்ள மார்கஸ் நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற 3 நாள் தப்லீகி ஜமாஅத் மாநாட்டில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது, தமிழகத்தில் இருந்து மட்டும் 1,500 பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என தமிழக சுகாதார அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளார்கள்.

    இதில் கோவையில் மட்டும், குறைந்தது 82 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், மதக் கூட்டத்தில் பங்கேற்ற 30 பேரில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 16 பேர் டெல்லி கூட்டத்தில் பங்கேற்றதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றார்.

     டெல்லி நிஜாமுதீனில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை டெல்லி நிஜாமுதீனில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை

    டெல்லி மதக் கூட்டம்

    டெல்லி மதக் கூட்டம்

    கடந்த வாரம் இறந்த 54 வயதான கொரோனா வைரஸ் நோயாளியும் நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீங்களே முன்வாருங்கள்

    நீங்களே முன்வாருங்கள்

    டெல்லி மதக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்களாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்றிருக்கலாம் அல்லது பங்கேற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடியவர்களை தொடர்பு அறிதல் முறையில் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடில் இருந்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்..

    தீவிரமாக தேடும் தமிழகம்

    தீவிரமாக தேடும் தமிழகம்

    டெல்லி நிஜாமுதீன் மத சொற்பொழிவு கூட்டத்தில் கலந்து கொண்ட 6 பேர் இறந்ததாக தெலுங்கானா தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் தொடர்பு-தடமறிதலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி சென்றதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உடையவர்கள் என தொடர்பு-தடமறிதலை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

    சமுதாய பரவல்

    சமுதாய பரவல்

    செவ்வாயன்று தமிழக அரசு வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், 12 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் 5 சதுர கி.மீ சுற்றளவில் வாழும் 3.96 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. சமுதாய பரவலை சரிபார்க்க 2 சதுர கி.மீ. சுற்றளவுக்கு வளையக்கப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்குவதாகவும் தமிழக அரசு அண்மையில் தெரிவித்தது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Health officials in Tamil Nadu are racing to trace people who came in contact with those who attended a religious congregation from March 13 to 15 in Delhi’s Nizamuddin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X