டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துப்பாக்கி சூட்டை கண்டித்து போராடிய ஜாமியா பல்கலை மாணவர்கள் கைது.. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    இதோ உங்கள் சுதந்திரம்.. மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

    டெல்லி: துப்பாக்கிச் சூட்டை கண்டித்து டெல்லி காவல் துறை தலைமையகம் அருகே போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

    டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மகாத்மா காந்தி சமாதி நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர். அப்போது அங்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.

    Delhi police arrested the students of Jamia Milia University

    அவர் திடீரென மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து கொள்ளுங்கள் உங்கள் சுதந்திரத்தை என கூறியபடி வானத்தை நோக்கியும் மாணவர்களை நோக்கியும் சுட்டார். இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷாதாப் என்ற மாணவரின் இடது கையில் தோட்டா பாய்ந்தது.

    ஜாமியா துப்பாக்கி சூடு.. கை கட்டி வேடிக்கை.. ரத்தத்துடன் பேரிகாடை தாண்டி போலீஸிடம் ஓடிய மாணவர்ஜாமியா துப்பாக்கி சூடு.. கை கட்டி வேடிக்கை.. ரத்தத்துடன் பேரிகாடை தாண்டி போலீஸிடம் ஓடிய மாணவர்

    அவர் ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய கோபால் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. எனினும் அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே போலீஸார் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் உயிரை காத்து கொள்ள காயமடைந்த மாணவர் பேரிகார்டை தாண்டி போலீஸ் இருக்கும் பகுதிக்கு ஓடியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து டெல்லியில் ஐடிஓஏ பகுதியில் உள்ள பழைய காவல் துறை தலைமையகத்துக்கு வெளியே நேற்று இரவு முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். இதனால் பரபரப்பு எழுந்தது.

    English summary
    Delhi police arrested the students of Jamia Milia University who protest outside the Police headquarters from yesterday night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X