டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி தீ விபத்தில் 43 பேர் உயிரிழப்புக்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளர் கைது.. போலீஸ் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி தீ விபத்தில் 43 பேர் உயிரிழப்புக்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளர் ரோகனை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் பை தயாரிக்கும் ஆலையில் இன்று அதிகாலை நடந்த பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் தீயில் படுகாயம் அடைந்தனர்.

Delhi Police detained Rehan, the owner of the building where a fire broke out, claiming lives of 43 people

இந்த விபத்தில் 43 பேர் உயிரிழக்க முக்கிய காரணம் கட்டிடத்தின் கட்டமைப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது.அதுவும் மிகக்குறுகலான கட்டிடம் என்பதுடன், ஏராளமானோர் அதில் உறங்கி கொண்டு இருந்ததும் முக்கிய காரணம் ஆகும்.

இன்னொரு காரணம் தீ விபத்த நடந்த இடத்தை தீயணைப்பு வீரர்களால் எளிதில் செல்ல முடியாத அளவுக்கு கட்டிடம் பாதுகாப்பற்ற முறையில் இருந்தது. இதுவும் அதிகம் பேர் இறக்க காரணம் ஆகும்.

டெல்லி தீ விபத்து.. 11 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ 'தீயணைப்பு வீரர் ராஜேஸ் சுக்லா'! அமைச்சர் நன்றிடெல்லி தீ விபத்து.. 11 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ 'தீயணைப்பு வீரர் ராஜேஸ் சுக்லா'! அமைச்சர் நன்றி

இந்நிலையில் பை தயாரிக்கும் ஆலை செயல்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் ரேஹன், தீவிபத்தை தொடர்ந்து தலைமறைவானார். அவரை தேடி கண்டுபிடித்த டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கட்டிட உரிமையாளரான ரேஹன் மீது இந்திய தண்டனைச்சட்டம் 304வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

English summary
Delhi Police have detained Rehan, the owner of the building where a fire broke out earlier today, claiming lives of 43 people. A case has been registered under section 304 of Indian Penal Code against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X