டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 38 பேர் இறந்தது தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க டெல்லி காவல்துறை இரண்டு சிறப்பு விசாரணைக் குழுக்களை (எஸ்ஐடி) அமைத்துள்ளது.

இரண்டு சிறப்பு விசாரைணக்குழுக்களும் துணை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் ஆன அதிகாரிகளால் அமைக்கப்பட்டுள்ளது .

 Delhi Police formed two special investigation teams (SITs) to probe all riot-related cases

இந்த சிறப்பு விசாரணை குழுக்களுக்கு டிசிபி ராஜேஷ் தியோ மற்றும் டிசிபி ஜாய் டிர்கி ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என்று செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிறப்பு விசாரணை குழு உடனடியாக மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்

இது தவிர, கூடுதல் காவல்துறை ஆணையர் (குற்றப்பிரிவு) பி.கே.சிங் இந்த பணிகளை மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறை இதுவரை 48 எஃப்.ஐ.ஆர்களை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் எஸ்ஐடி விசாரிக்க உள்ளது.

English summary
the Delhi Police has formed two special investigation teams (SITs) to probe all cases related to the riots that broke out in North East Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X