டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டப்படி செயல்படலை.. சுதந்திரமாகவும் இயங்கலை.. டெல்லி போலீஸை விளாசிய சுப்ரீம் கோர்ட்

ஒரு போலீஸ் போல போலீஸ் செயல்படவில்லை. அதுதான் முதல் பிரச்சனை, டெல்லியில் போராட்டம் பெரிதானதற்கு காரணம் இதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி போலீஸ் சரியாக நேர்மையாக செயல்படவில்லை, அதுதான் முதல் பிரச்சனை, டெல்லியில் போராட்டம் பெரிதானதற்கு காரணம் இதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Recommended Video

    Delhi CAA clash:Supreme Court slams delhi police| டெல்லி போலீசை விளாசிய உச்சநீதிமன்றம்

    டெல்லியில் நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் விடாமல் நடந்து வருகிறது.இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர். அங்கு கலவரம் நொடிக்கு நொடி தீவிரம் அடைந்து வருகிறது.

    இதற்கு மத்தியில் டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஷாகீன் பாக் பகுதியில் போராடும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இரண்டு மனுக்கள் இதில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

     நிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு! நிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு!

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    இன்று உச்ச நீதிமன்றத்தில் ஷாகீன் பாக் வழக்கில் மிகவும் காரசாரமான வாதங்கள் நடந்தது. முதலில் தனது வாதத்தை வைத்த அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லியில் கலவரம் நடக்கிறது. அங்கு போலீசார் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதம் செய்கிறார்கள். இதனால் உடனடியாக சிஏஏ போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை கேட்டதும் நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர்.

    என்ன கோபம்

    என்ன கோபம்

    இந்த வழக்கை உச்ச நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் , கே எம் ஜோசப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். மிகவும் கோபமாக பேச தொடங்கிய நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல், டெல்லியில் நடப்பது மிகவும் கொடுமையானது. எதிர்பார்க்காத ஒன்று. துரதிஷ்டவசமானது. டெல்லியில் இப்போது நடக்கும் விஷயங்கள் நடந்திருக்க கூடாது. அதை தடுத்து இருக்க வேண்டும்.

    கொடூரம்

    கொடூரம்

    ஆனால் இதற்கும் ஷாகீன் பாக் வழக்கிற்கும் தொடர்பு கிடையாது. இந்த வழக்கை நாங்கள் அந்த கோணத்தில் விசாரிக்க மாட்டோம். இந்த கலவரத்திற்கு யாரும் பொறுப்பேற்க விரும்புவது இல்லை. எல்லோரும் வேறு யார் மீதாவது கை காட்டுகிறார்கள் . இதுபோன்ற கொடூரம் டெல்லியில் நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது, என்று கூறினார். அதன்பின் சஞ்சய் லேசாக இன்னொரு நீதிபதி கே எம் ஜோசப்பை பார்த்து சிரித்தார்.

    மிக அதிக கோபம்

    மிக அதிக கோபம்

    அதன்பின் பேசிய கே எம் ஜோசப் மிக கோபமாக பேசினார். அவர், டெல்லியில் போலீஸ் கொல்லப்பட்டார் என்று சொலிஸ்டர் ஜெனரல் கூறுகிறார். அந்த அளவிற்கு கலவரம் ஏற்பட விட்டது போலீஸ்தான். போலீஸ்தான் இதை வேடிக்கை பார்த்தது. சரியான நேரத்தில் போலீஸ் செயல்படவில்லை . போலீசிடம் போதிய பணி சார்ந்த மனப்பான்மை இல்லை.

    பெரிய பிரச்சனை

    பெரிய பிரச்சனை

    ஒரு போலீஸ் போல போலீஸ் செயல்படவில்லை. அதுதான் முதல் பிரச்சனை. இங்கிலாந்து போலீஸ் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? அங்கே போலீஸ் முன் ஒருவர் துப்பாக்கியை வைத்து தூக்கி காட்டிவிட்டு அப்படியே போய்விட முடியுமா. உங்களிடம் போதுமான திறமை , போலீஸ் மனப்பான்மை இல்லை, போலீஸ் சரியாக செயல்பட்டு இருந்தால் இப்படி நடந்திருக்காது, என்று குறிப்பிட்டார் . டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Delhi police has lack of professionalism says SC on Shaheen Bagh protest case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X