டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனியாக சிக்கிய கான்ஸ்டபிள்.. அரண் போல சூழ்ந்து.. ஒரு அடி கூட விழாமல் காத்த விவசாயிகள்.. நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய டெல்லி பகுதியில் தனியாக சிக்கிய போலீஸ்காரர் ஒருவரை தாக்க சில விவசாயிகள் முயல, பிற விவசாயிகள் அரண் போல சுற்றி நின்று அவரை பத்திரமாக மீட்டனர்.

டெல்லியில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது, மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதிவரை, விவசாயிகளின் ஒரு பிரிவினர் தங்களது பாதையை மாற்றிக் கொண்டு வந்துவிட்டனர்.

Delhi Police personnel rescued by protesters when attempted to assault him

இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் காவல்துறையினரை விரட்டியடித்தனர்.
பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தினர்.

Delhi Police personnel rescued by protesters when attempted to assault him

இவ்வாறு இருதரப்பினரும் மோதிக் கொண்டபோது, ஒரு கான்ஸ்டபிள் மட்டும் போராட்டக்காரர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டார். அவரைத் தாக்குவதற்கு கம்புகளுடன் விவசாயிகள் ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். அப்போது சில மூத்த விவசாயிகள் கான்ஸ்டபிளை சூழ்ந்து கொண்டு, அவர் மீது யாரும் அடித்து விடாதபடி தடுத்துக் கொண்டனர்.

வேகமாக வந்து சிலர் அடிக்க முற்பட்ட போது கூட அரண் போல சூழ்ந்து நின்று பத்திரமாக அவரை சற்று தூரம் தள்ளிச் சென்று பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A Delhi Police personnel rescued by protesters as one section of protesters attempted to assault him at ITO in central Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X