டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமிஷ்னர் சரியில்லை.. கிரண்பேடி மாதிரி ஒருவர் வேண்டும்.. டெல்லி போலீசார் பரபர கோரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் போலீசார் தங்களது கமிஷ்னர் சரியில்லை என்று புகார் வைத்துள்ளனர்.

டெல்லியில் போலீசார் போராட்டம் நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பல மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் பார்க்கிங் பிரச்சனையில் போலீசாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் தாக்கினார்கள்.இதில் போலீசார் பலர் மோசமாக காயம் அடைந்தனர். இதனால் போலீசார் தற்போது டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நடவடிக்கை எடுப்போம்.. போராட்டத்தை கைவிடுங்கள்.. சமாதானம் சொன்ன கமிஷ்னர்.. கேட்காத போலீசார்!நடவடிக்கை எடுப்போம்.. போராட்டத்தை கைவிடுங்கள்.. சமாதானம் சொன்ன கமிஷ்னர்.. கேட்காத போலீசார்!

தலைமை சரியில்லை

தலைமை சரியில்லை

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போலீசார் தங்களது தலைமை சரியில்லை என்று புகார் வைத்து இருக்கிறார்கள். அதன்படி தங்கள் டெல்லி கமிஷ்னர் அமுல்யா பட்நாயக் தலைமை சரியில்லை. அவர் அதிரடி முடிவுகளை எடுக்கவில்லை. எங்களுக்கு அதிரடியான தலைவர் வேண்டும்.

நாங்கள் இல்லை

நாங்கள் இல்லை

இவருக்கு கீழ் நாங்கள் பாதுகாப்பாக உணர மாட்டோம். கிரண் பேடி போல இவர் இல்லை. எங்களுக்கு நல்ல முடிவு எடுக்க கூடிய வலிமையான தலைவர்தான் தேவை.

கிரண்பேடி போல

கிரண்பேடி போல

எங்களுக்கு தீபக் மிஸ்ரா, கிரண் பேடி போல தலைவர் வேண்டும். இவரை போல வீக்கான தலைவர் வேண்டாம், என்று போலீசார் முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். போலீசாரே, போலீஸ் கமிஷ்னருக்கு எதிராக இப்படி போராட்டம் செய்வது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி போலீசார்

டெல்லி போலீசார்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிரண் பேடி, டெல்லியில் போலீசார் போராட்டத்தை கைவிட வேண்டும். அவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். போலீசார் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

English summary
Delhi Police protest: We want a strong leader like Kiran Bedi not weak commissioner says Police officers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X