டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேண்டும்..வேண்டும்.. நீதி வேண்டும்.. விண்ணை அதிரவைத்த டெல்லி போலீஸ் முழக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் போராட்டம் நடத்திய போலீசார்

    டெல்லி: நீதி வேண்டும்.. நீதி வேண்டும் என டெல்லியில் போலீஸார் விண்ணையே அதிர வைக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். இதனால் டெல்லியில் பதற்றம் நீடித்து வருகிறது.

    டெல்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விஷயத்தில் போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    Delhi police raised slogans We want justice

    இதில் டெல்லி வடக்கு இணை காவல் ஆணையர், கண்காணிப்பாளர்கள், போலீஸார் என ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த தகராறில் போலீஸாரின் வாகனங்கள், கைதிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், வழக்கறிஞர்களின் கார்கள் என ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இந்த நிலையில் நேற்றைய தினம் போலீஸாரிடமிருந்து பாதுகாப்பு தேவை என கோரி வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். இதைத் தொடர்ந்து தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து டெல்லி காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன் ஆயிரக்கணக்கான போலீஸார் திரண்டு 3 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அப்போது அவர்கள் நீதி வேண்டும் நீதி வேண்டும் என்ற முழக்கங்களை இட்டனர். இதனால் டெல்லியில் பதற்றம் நீடித்து வருகிறது.

    English summary
    Delhi Police personnel hold protest outside police HQ, raising "we want justice" slogan against the clash araise between police and lawyers in court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X