டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரண்பேடி பாணியில் வக்கீல்களுக்கு பதிலடி.. விடாமல் முழங்கும் டெல்லி போலீஸ்.. அப்படி என்ன செய்தார்?

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் போராட்டம் நடத்திய போலீசார்

    டெல்லி: டெல்லி போலீஸ் கமிஷனர் கிரண் பேடியைப் போல செயல்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் கோஷமிட்டு வருகிறார்கள்.

    திஸ் ஹசாரே நீதிமன்ற வளாகத்தில் கடந்த சனிக்கிழமை, சில வக்கீல்களால், போலீசார் கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, மப்டியில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக் கணக்கான போலீசார் டெல்லியில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    அவர்களிடம் போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்நாயக் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை பின்வாங்குவதாக இல்லை.

    வேண்டும்..வேண்டும்.. நீதி வேண்டும்.. விண்ணை அதிரவைத்த டெல்லி போலீஸ் முழக்கம்வேண்டும்..வேண்டும்.. நீதி வேண்டும்.. விண்ணை அதிரவைத்த டெல்லி போலீஸ் முழக்கம்

    கிரண்பேடி

    கிரண்பேடி

    போலீஸ் கமிஷனர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிரண் பேடியைபோலவே, செயல்படுவது அவசியம் என்ற கோஷக்குரல்கள் எழுந்தன. எதற்காக போராட்டக்காரர்கள் கிரண்பேடியை இப்போது நினைவுகூறுகிறார்கள், என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால், பல போலீஸ் அதிகாரிகளின் ஆதர்ஷ நாயகியான கிரண்பேடியின், 1988ம் ஆண்டின், ஒரு செயலைத்தான், இப்போதும் போலீசார் திரும்ப உச்சரிக்கிறார்கள். அது என்ன சம்பவம் என்பதற்கு ஒரு குட்டி பிளாஷ் பேக்.

    வக்கீல்கள் மீது தாக்குதல்

    வக்கீல்கள் மீது தாக்குதல்

    1988 ஆம் ஆண்டில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்களிடையே இப்படித்தான் ஒரு மோதல் நடந்தது. அப்போது வடக்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனராக கிரண் பேடி இருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் குழு மீது இரண்டு தனித்தனியான தாக்குதல்கள் அப்போது நடந்தன. அதில் ஒரு தாக்குதலை கிரண்பேடிதான் வடிவமைத்து திட்டமிட்டு ஏற்படுத்தினார் என்ற பேச்சு அப்போது எழுந்தது.

    திருட்டு வழக்கு

    திருட்டு வழக்கு

    வடக்கு டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் திருட்டு ஒன்று அப்போது, நடைபெற்றது. அந்த வழக்கில், சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் ஒரு வழக்கறிஞர். அவரது கைகளில் கைவிலங்கு போடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    3000 பேர் கும்பல்

    3000 பேர் கும்பல்

    1988, பிப்ரவரி 17ம் தேதி, திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், போலீசாருக்கும்-வக்கீல்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, வழக்கறிஞர்களின் அலுவலகங்களுக்கு குறைந்தது 3,000 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வந்தது, வக்கீல்களை சரமாரியாக தாக்கி, வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடியது.

    கிரண்பேடி பாணி

    கிரண்பேடி பாணி

    வக்கீல்களின் போராட்டத்திற்கு பதிலடியாக கிரண் பேடி இந்த கும்பலை ஏவி விட்டதாக வக்கீல்கள் குற்றம்சாட்டினர். ஆனால், காவல்துறை குற்றச்சாட்டுகளை மறுத்தது. இந்த நிலையில், இப்போது போலீசார், கிரண்பேடியை போல டெல்லி போலீஸ் கமிஷனர் செயல்பட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    English summary
    Delhi Police Commissioner Kaisa Ho, Kiran Bedi Jaisa Ho, says protesters the chants demanding that a police commissioner should be like Kiran Bedi has its roots in 1988 when clashes had taken place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X