டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை

    டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7மணி முதலே காற்று மாசு அபாய கட்ட அளவில் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

    டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக காற்று மாசின் அளவு அங்கு மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறிவந்தது.

    இதையொட்டி டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று (வியாழக்கிழமை), இன்றும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிப்பதாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா புதன்கிழமை அறிவித்தார்.

     489 ஆக உயர்வு

    489 ஆக உயர்வு

    இந்த சூழலில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதலே மிக அபாயகட்ட அளவில் காற்று மாசு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காற்று தர புள்ளிகள் 489 ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிக உச்ச பட்ச அபாயம் ஆகும்.

    100 என்றால் பரவாயில்லை

    பொதுவாக ஒரு மனிதனுக்கு நல்ல காற்று என்பது 0 முதல் 50 காற்று தர புள்ளிகள் (பச்சை குறியீடு) இருக்க வேண்டும். அதன்பிறகு 51 முதல் 100 என்றால் பரவாயில்லை என்று சொல்லாம் இதை மஞ்சள் நிறத்தில் குறியீடு அளிப்பார்கள்.

    200 வரை மோசம்

    200 வரை மோசம்

    அதற்கு அடுத்த அளவான 101 முதல் 150 என்றால் சிலருக்கு பாதிப்பை ஏற்படும் அளவாகும். இதனை ஆரஞ்சு வண்ண குறிட்டில் கூறுவார்கள். 151 முதல் 200 அளவு என்றால் அந்த காற்று நல்லதல்ல அதாவது சிவப்பு எச்சரிக்கை குறியீட்டில் கூறுவார்கள்.

    201 முதல் 300 மிக மோசம்

    201 முதல் 300 மிக மோசம்

    201 முதல் 300 என்றால் மிகவும் மோசமான மாசு என்பதாகும். இதை பர்பிள் வண்ணத்தில் குறியிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் கூறுவார்கள். 301 முதல் 500 என்றால் மிக அபாயகரமான அளவு ஆகும். இதை மெரூன் கலரில் குறியிட்டு சொல்வார்கள். இது ஒட்டுமொத்த மக்களையும் மிகவும் மோசமாக பாதிக்கக்கூடிய அளவாகும்.

    பொதுமக்கள் அவதி

    பொதுமக்கள் அவதி

    இப்போது கடைசியாக சொன்ன மெரூன் குறியீட்டின் படிதான் டெல்லியில் காற்று மாசுபாடு உள்ளது. அதுவும் உச்ச பட்ச அளவாக 489 ஆக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கட்டுமானங்களுக்கு தடை

    இதற்கிடையே டெல்லியில் கல் குவாரிகளின் இயக்கத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளிக்கிழமை வரை தடை விதித்து உள்ளது. மேலும் இயற்கை எரிவாயு அல்லாமல், நிலக்கரி போன்ற எரிபொருட்களில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு இன்று வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மாநிலத்தில் கட்டுமான பணிகள் அனைத்துக்கும் கடந்த 4-ந்தேதி முதல் உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

    English summary
    Delhi: Major pollutant PM 2.5 at 489 (severe category), at ITO, according to Central Pollution Control Board
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X