டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி மாசுபாடு.. சாட்டிலைட் புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன நீதிபதிகள்.. சரமாரி கேள்வி!

15 வெடிகுண்டு பைகளை கொண்டு வந்து டெல்லி மக்களை உடனடியாக ஒரே அடியாக கொன்று விடுங்கள் என்று டெல்லி மாசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபமாக பேசியுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லியில் எவ்வளவு மாசு ஏற்பட்டு இருக்கிறது என்று வெளியான சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களை பார்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லி: டெல்லியில் எவ்வளவு மாசு ஏற்பட்டு இருக்கிறது, அங்கு காற்று எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று வெளியான சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களை பார்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லியில் ஏற்பட்டு இருக்கும் காற்று மாசு தற்போது மிக முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. டெல்லியில் மாசு அதிகம் ஆகி வருவதை அடுத்து இதற்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இன்றைய அமர்வில் நீதிபதிகள் ஜேஜே அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் மிக கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள்.

அஜித் பவாரை நான்தான் பாஜகவிற்கு அனுப்பி வைத்தேனா? நம்பாதீர்கள்.. உண்மையை உடைத்த சரத் பவார்!அஜித் பவாரை நான்தான் பாஜகவிற்கு அனுப்பி வைத்தேனா? நம்பாதீர்கள்.. உண்மையை உடைத்த சரத் பவார்!

ஆஜர் ஆனார்கள்

ஆஜர் ஆனார்கள்

இந்த வழக்கில் இன்று பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா மாநில தலைமை செயலாளர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதேபோல் டெல்லி அரசு சார்பாக சாட்டிலைட் புகைப்படங்கள் அளிக்கப்பட்டது. இதை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானாவில் புகை வெளியாவது குறைவதற்கு பதில் அதிகமாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கோபம் அடைந்தனர்

கோபம் அடைந்தனர்

இதை பார்த்து கோபம் அடைந்த நீதிபதிகள், நாங்கள் கடுமையான உத்தரவுகளை போட்டும் கூட எந்த விதமான மாற்றமும் நடக்கவில்லை. நீங்கள் மூன்று பேரும் என்ன செய்தீர்கள். இப்போதே உங்கள் செயல்பாடு குறித்தும், நடவடிக்கை குறித்தும் விளக்குங்கள். உங்களின் தவறால் டெல்லி மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

டெல்லி மக்கள்

டெல்லி மக்கள்

நீங்கள்தான் டெல்லி மக்களுக்கு போதுமான நிவாரணத்தை கொடுக்க வேண்டும். இந்தியாவில் வாழ்வதே கஷ்டம் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மலிவானது கிடையாது. போபால் விஷ வாயு தாக்குதலில் இருந்து நாம் இன்னும் பாடம் கற்கவில்லை.

ஏன் பதவி

ஏன் பதவி

நீங்கள் எல்லாம் பதவியில் இருந்து கொண்டு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள். மக்கள் ஏன் இப்படி விஷ வாயு கூடத்தில் வசிக்க விடும். அவர்கள் எல்லோரையும் மொத்தமாக கொன்றுவிடலாமே அதற்கு. 15 வெடிகுண்டு பைகளை கொண்டு வாருங்கள்.

15 வெடிகுண்டு

15 வெடிகுண்டு

மக்களை உடனடியாக ஒரே அடியாக கொன்று விடுங்கள். ஏன் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்து கஷ்டப்பட வேண்டும். நீங்களும் அதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. உங்களின் அலட்சியத்தால் மக்களின் வாழ்நாள் குறைகிறது.

மொத்தமாக நரகம்

மொத்தமாக நரகம்

டெல்லி நரகமாக மாறி வருகிறது. மக்கள் சாவதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் இதை இனியும் அனுமதிக்க முடியாது. இப்போது நடப்பது இனியும் டெல்லியில் நடக்க கூடாது என்று நீதிபதிகள் இன்றைய அமர்வில் குறிப்பிட்டனர். இது தொடர்பாக மூன்று தலைமை செயலாளர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

English summary
Get Bombs in 15 bags and kill the people in one go says Supreme Court in Delhi pollution case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X