டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் பெயர் யாருக்கு தேவை.. தீர்வை சொல்லுங்கள்.. 3 மாநில தலைமை செயலாளர்களை தெறிக்கவிட்ட நீதிபதிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோசமான நிலையில் டெல்லி... தவிக்கும் மக்கள்... எச்சரிக்கும் நிபுணர்கள்

    டெல்லி: டெல்லி மாசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூன்று மாநில தலைமை செயலாளர்களிடமும் நீதிபதிகள் மிக கடுமையாக கேள்வி கேட்டனர்.

    தலைநகர் டெல்லி தற்போது சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது.

    டெல்லி மாசுபாட்டிற்கு எதிராக பல்வேறு பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று சிறப்பு அமர்வு முன் நடைபெற்றது. நீதிபதிகள் ஜேஜே அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர்.

    முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார் பிரபல டிவி நடிகைமுன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார் பிரபல டிவி நடிகை

    கடுமையான கேள்வி

    கடுமையான கேள்வி

    டெல்லி மாசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று உத்தர பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில தலைமை செயலாளர்கள் ஆஜர் ஆனார்கள். இதில் மூன்று மாநில தலைமை செயலாளர்களையும் நீதிபதிகள் மிக கடுமையாக கேள்வி கேட்டனர். அதிலும் உத்தர பிரதேச தலைமை செயலாளரை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். உத்தர பிரதேச தலைமை செயலாளரை பெயரை சொல்ல கூட நீதிபதிகள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பேச்சு

    பேச்சு

    நீதிபதிகள் தங்கள் பேச்சில், நீங்கள் உங்களை பெயரை எல்லாம் சொல்ல வேண்டாம். அதில் எல்லாம் எங்களுக்கு ஆர்வம் கிடையாது. நேரடியாக விஷயத்திற்கு வாருங்கள். அதேபோல் நீங்கள் இங்கு வந்து எப்படி புகை வருகிறது, எப்படி மாசு ஏற்படுகிறது என்று பாடம் எடுக்க வேண்டும்.

    என்ன தீர்வு

    என்ன தீர்வு

    எங்களுக்கு தீர்வு என்ன என்று மட்டும் சொல்லுங்கள். இந்த புகையை சரி செய்ய நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். வெறுமனே ஆலோசனை செய்தோம். மீட்டிங் போட்டோம் என்று சொல்ல வேண்டாம். மீட்டிங் மூலம் என்ன நடந்தது. முடிவு என்ன நிகழ்ந்தது என்று சொல்லுங்கள்.

    டெல்லி மாசுபாடு

    டெல்லி மாசுபாடு

    டெல்லி மாசுபாட்டிற்கு உத்தர பிரதேசமும் ஒரு காரணம். ஆனால் நீங்கள் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. என்ன அநியாயம் இது. இது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நேரம் இல்லை. முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் நேரம்.

    வேலை பாருங்கள்

    வேலை பாருங்கள்

    நீங்களாக களமிறங்கி வேலை பார்த்தால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். நீங்களும், உங்கள் அரசாங்கமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த பிரச்னையை தீர்ப்பது பற்றி யாருக்கும் கவலையில்லை, யாருக்கும் விருப்பம் இல்லை.

    புகை காரணம்

    புகை காரணம்

    புகை தொடர்ந்து ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் எல்லோரும் மீதும் நடவடிக்கை எடுங்கள் . உயர் அதிகாரிகளாக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். உங்களுக்கு 7 நாள் டைம் தருகிறேன். உடனே இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பியுங்கள் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    English summary
    We are interested in your name, tell us Solution says Supreme Court to Chief Sectary in Delhi Pollution case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X