டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த டெல்லி இளம் மாணவ, மாணவிகளை பாருங்க.. எவ்வளவு க்யூட்.. போலீசாரை எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீசுக்கு ரோஸ் கொடுத்த பெண்... போராட்டத்தின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

    டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள், போலீசாருக்கு ரோஜா பூக்களை கொடுத்து அசத்தியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக சுற்றி வருகின்றன.

    குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மீது போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தடியடி நடத்தியதால் மாணவர்கள் போராட்டம் நாடு முழுக்க விரிவடைந்தது.

    Delhi protesting students gives roses to police on duty

    டெல்லி காவல்துறைக்கு மாணவர்களுக்கும் இடையே இணக்கமற்ற சூழ்நிலை நிலவ கூடிய, இந்த நிலையில் போராட்டம் நடத்தும் இடங்களுக்கு வருகைதரும் போலீசாருக்கு சிகப்பு ரோஜாக்களை கொடுத்து தங்கள் அன்பை வழிகாட்டுகிறார்கள் மாணவ மாணவிகள்.

    சில இடங்களில் போராட்டக்காரர்களை போலீஸார் கலைக்க வரும் நேரத்தில் திடீரென தேசிய கீதத்தை பாட தொடங்குகிறார்கள், மாணவ மாணவிகள். எனவே எங்கும் அசையாமல் போலீசாரும் அப்படியே நின்று விடும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் போலீசாரின் நடவடிக்கையிலிருந்து ஆங்காங்கு தப்பி வருகின்றனர்.

    இவ்வாறு தங்கள் போராட்ட முன்னெடுப்பை பிரச்சினை இன்றி கொண்டு செல்ல பல்வேறு வகையான வியூகங்களையும், ஐடியாக்களையும் மாணவ மாணவிகள் செயல்படுத்தி அசத்தி வருகின்றனர். காந்திய வழியில் அகிம்சையாக போராடுவதால் மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதற்கு போலீசாரும் தயங்குகின்றனர். சில இடங்களில் டெல்லி போலீசார், போராட்டத்தில் ஈடுபட கூடிய இளம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தண்ணீர் கொடுத்து தாகம் தணித்து உதவியதையும் பார்க்க முடிந்தது.

    மாணவ, மாணவிகள் விதவிதமான பதாகைகளை ஏந்தி உள்ளனர். ஒரு மாணவி தனது பதாகையில், டெல்லி போலீசார் 144 தடை உத்தரவை எப்படி காதலிக்கிறார்களோ, காதல் என்றால் அதுதான் காதல். அதேபோல காதலிக்க வேண்டும் என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.

    ஏனெனில் டெல்லியில் அவ்வப்போது 144 தடை உத்தரவை காவல்துறையினர் பிறப்பித்து வருகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மற்றொரு மாணவி, "எனது தந்தை நான் வரலாறு படித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்.. ஆனால் நான் இங்கு வரலாறு படைக்க வந்துள்ளேன்" என்று எழுதிவைத்து போராட வந்த உள்ளவர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்டுகளை அளித்தார்.

    English summary
    There are several viral images of students offering roses to the cops on duty. Delhi police, which drew considerable flak for its action against students in Jamia Millia Islamia University, also put its best shoe forward at most protest sites.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X