டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி வன்முறை வழக்கு: ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் ஊபா சட்டத்தின் கீழ் கைது

Google Oneindia Tamil News

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ.) முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு (குடியுரிமை திருத்த சட்டம்) எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி மாதம் நடந்த போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.

Delhi riots case: JNU Ex student leader Umar Khalid arrested under UAPA

இந்த வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 97 பேருக்கு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தன. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் மாணவர் அமைப்புகளின் தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா ஜார்கர் உள்ளிட்டோர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி கலவரம்.. ஜேஎன்யூ மாணவர் சர்ஜீல் இமாம் உபா சட்டத்தின் கீழ் கைது.. தேச துரோக வழக்கு!டெல்லி கலவரம்.. ஜேஎன்யூ மாணவர் சர்ஜீல் இமாம் உபா சட்டத்தின் கீழ் கைது.. தேச துரோக வழக்கு!

டெல்லி வன்முறை வழக்கில் இதுவரை மொத்தம் 751 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 1,575 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

குற்றவியல் நடைமுறையை டெல்லி காவல்துறை கேலிக்கூத்தாக்கியுள்ளது.. டெல்லி கலவரம் குறித்து ப சிதம்பரம்குற்றவியல் நடைமுறையை டெல்லி காவல்துறை கேலிக்கூத்தாக்கியுள்ளது.. டெல்லி கலவரம் குறித்து ப சிதம்பரம்

டெல்லி கலவர வழக்கில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயரும் துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், ஊபா சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். முன்னதாக உமர் காலித்திடம் 11 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் மேலும் பலர் கைது செய்யபடக் கூடும் என தெரிகிறது.

டெல்லி கலவர வழக்கில் பாரபட்சம் காட்டாதீங்க.. டெல்லி போலீஸுக்கு.. ரிபைரோ அதிரடி கடிதம்டெல்லி கலவர வழக்கில் பாரபட்சம் காட்டாதீங்க.. டெல்லி போலீஸுக்கு.. ரிபைரோ அதிரடி கடிதம்

English summary
Jawaharlal Nehru University Former student leader Umar Khalid was arrested Sunday night in Delhi riots case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X