டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தண்டவாளத்தில் சென்ற 3 பெண்கள்.. கன நொடியில் தள்ளிவிட்டு உயிரை கொடுத்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்டவாளத்தில் நடந்த பெண்களை காப்பாற்றி உயிரைவிட்ட போலீஸ்- வீடியோ

    டெல்லி: ரயிலில் அடிபடாமல் 3 பெண்களை கடைசி நொடியில் தள்ளிவிட்டு காப்பாற்றிய, ரயில்வே கான்ஸ்டபிள் ரயில் மோதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக ரயில்வே டிசிபி டிகே குப்தா கூறுகையில், ரானா(51) என்ற ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள், தண்டவாளத்தில் யாரும் செல்கிறார்களா, வழிபறி செய்யும் நோக்கில் யாரும் இருக்கிறார்களா என்பதை ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணி அளவில் அஜத்பூர் பகுதியில் ரோந்து சென்று சென்றுள்ளார்.

    அப்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த பாதையில் 3 பெண்கள் சென்று கொண்டிருப்பதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அதேநேரம் ரயில் ஓட்டுனரும் எச்சரிக்கும் விதமாக ஹாரன் அடித்துள்ளார்.

    விளையாட்டு வினையானது.. போதையில் தூக்கிட்டு கொள்வதாக வீடியோ மூலம் விளையாடிய இளைஞர் பலி விளையாட்டு வினையானது.. போதையில் தூக்கிட்டு கொள்வதாக வீடியோ மூலம் விளையாடிய இளைஞர் பலி

    காப்பாற்றினார்

    காப்பாற்றினார்

    ஆனால் அந்த பெண்கள் அதனை கவனிக்காமல் சென்று கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் எதிர் தண்டவாளத்தில் இருந்த ரானா ஓடிவந்து ரயில் வருவதற்கு ஒரு சில வினாடிக்கு முன்பு வந்து 3 பெண்களையும் தண்டவாளத்தை விட்டு தள்ளிவிட்டுள்ளார். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.

    பெண்கள் அலறல்

    பெண்கள் அலறல்

    ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ரானா மீது ரயில் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அலறிய 3 பெண்களும் உடனடியாக அருகில் இருந்த அஜாத்பூர் ரயில்வே பாதுகாப் படை கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு ரயில்வே அதிகாரிகள் பொதுமக்கள் விரைந்து வந்து ரானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு கூறினார்.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    மூன்று பெணகளையும் தள்ளிவிட்டு காப்பற்றிய ரானா ஒரு காலை தண்டவாளத்திலும் மற்றொரு காலை வெளியிலும் வைத்து கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்ததே அவர் உயிரிழக்க காரணம் என கூறப்படுகிறது. தலையில் அதிக ரத்தம் வெளியேறியதே ரானா உயிரிழப்பு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    போலீசார் வழக்கு

    போலீசார் வழக்கு

    ஹரியானா மாநிலம் குட்டாபார்க்கில் ரானா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் டெல்லியில் ஆர்பிஎப் போலீசில் வேலை பார்த்து வந்துள்ளார். இப்போது ரானா உயிரிழந்துவிட்டதால், அவரது மனைவி கணவனையும், அவரது பிள்ளைகள் தந்தையையும் இழந்து தவிக்கிறார்கள். மூன்று பெண்களை ரயில் அடிபடாமல் காப்பற்றிய போலீஸ்காரர் அதற்காக உயிரை விட்ட சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கவனக்குறைவாக சென்ற மூன்று பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Delhi RPF constable saves three women at the last movement, he hit by the train and died on the spot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X