மொத்த வீட்டையே விஷவாயு கூடமாக மாற்றி.. கூட்டாக தற்கொலை செய்த டெல்லி குடும்பம்.. சில்லிட வைத்த கடிதம்
டெல்லி: டெல்லியில் ஒரு குடும்பம் மொத்த வீட்டையே விஷ வாயு கூடமாக மாற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி டெல்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சா(தீ) வெறி... 3 நாட்களாக புதைக்கப்படாத பட்டியலின பெண் உடல் - வெட்கித் தலைகுனிவதாக சீமான் வேதனை
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் இதில் இருந்தது. இந்த விசாரணை நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக நெட்பிளிக்ட்ஸில் "ஹவுஸ் ஆப் சீக்ரெட் - புராரி டெத்" என்ற தொடர் கூட வெளியாகி இருந்தது.

டெல்லி குடும்பம்
இறந்து போன அப்பாவின் ஆவி பேசியதாகவும், அவர்கள் வழிகாட்டியாகவும் கூறி இந்த தற்கொலையை மொத்த குடும்பமும் சேர்ந்து செய்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே இந்த தற்கொலை சில்லிட வைத்தது. இந்த நிலையில்தான் தற்போது டெல்லியில் ஒரு குடும்பம் மொத்த வீட்டையே விஷ வாயு கூடமாக மாற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டெல்லியை இந்த சம்பவம் உலுக்கி உள்ளது.

டெல்லி குடும்பம் தற்கொலை
தெற்கு டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில், வசந்த் அபார்ட்மெண்ட் சொஸைட்டியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இங்கு வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராமல் உள்ளேயே இருந்ததை வைத்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளனர். அப்போது வீடு உள்ளே பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் கதவும் திறக்கப்படவில்லை. வீட்டின் ஜன்னல்கள் பாலிதீன் கவர் போட்டு மூடப்பட்டு இருந்தது. வீடு மொத்தமும் காற்று வெளியே போகாத அளவிற்கு இறுக்கமாக மூடப்பட்டு இருந்தது.

விஷ வாயு தற்கொலை
இதையடுத்து சந்தேகம் அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கதவிற்கு அருகே பேப்பர்கள் சில கிடைத்துள்ளன. இதை கைப்பற்றிய போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பேப்பர்களில், நாங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளோம். இந்த வீடு முழுக்க விஷவாயு இருக்கிறது.

கார்பன் மோனாக்சைட்
எல்லாம் கார்பன் மோனாக்சைட். இது தீ பிடிக்க கூடியது. அதனால் கதவை திறந்ததும் உள்ளே வர வேண்டாம். ஜன்னலை எல்லாம் திறந்து விடுங்கள். உள்ளே நெருப்பு பற்ற வைக்க வேண்டாம். மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டாம். தீ பிடிக்கும். ஜன்னலை திறக்கும் போதும் கவனமாக திறங்கள். ஏனென்றால் முழுக்க முழுக்க இது விஷ வாயு ஆகும். உள்ளே இருந்து வரும் நச்சு புகையை சுவாசிக்க வேண்டாம் என்று கடிதம் எழுதப்பட்டு இருந்தது.

லெட்டர்
இந்த லெட்டரை படித்துவிட்டு உள்ளே போலீசார் கவனமாக சென்றனர். உள்ளே சென்ற போலீசாருக்கு பெரிய ஷாக். காரணம் வீட்டிற்கு உள்ளே 50 வயது பெண் ஒருவரும் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். இவர்கள் உள்ளேயே நச்சு புகையை சுவாசித்து தற்கொலை செய்துள்ளனர். வீட்டிற்கு உள்ளே நிலக்கரியை தீ வைத்து கொளுத்தி அதன் மூலம் நச்சு புகையை உண்டாக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்
இதன் மூலம் உருவான கார்பன் மோனாக்சைட் காரணமாக இவர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருந்து நச்சு புகை வெளியே போக கூடாது என்பதால் இவர்கள் மொத்தமாக வீட்டு கதவுகளை மூடி, ஜன்னலை மூடி, எல்லா இடங்களிலும் பாலீதின் கவர் வைத்து மறைத்து காற்று போகாமல் செய்து, நச்சு புகையை சுவாசித்து பலியாகி உள்ளனர். அதோடு வீட்டில் இருக்கும் சிலிண்டரையும் திறந்துவிட்டுள்ளனர் .

என்ன நடந்தது?
இதனால் எல்லாம் சேர்ந்து நச்சு தன்மையை ஏற்படுத்தி அவர்கள் பலியாகி உள்ளனர். போலீஸ் வந்த போது கூட உள்ளேயே நிலக்கரி எரிந்து கொண்டு இருந்துள்ளது. இறந்த பெண்ணின் பெயர் மஞ்சு. அவர்களின் பெண் குழந்தைகள் பெயர் அனுஸ்கா, அன்கு. இவர்கள் தற்கொலை செய்ததற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. ஆனால் அதே சமயம், கடந்த வருடம் அந்த பெண்ணின் கணவன் கொரோனா காரணமாக பலியாகிவிட்டார். இதனால் உடைந்து போன குடும்பம் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.