நானியின் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் வரும் உலகை அதிரவைத்த மறுஜென்மம் சாந்திதேவி கேஸ்-நடந்தது என்ன?
டெல்லி: தெலுங்கு முன்னணி நட்சத்திரம் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படம் OTT தளத்திலும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் குறிப்பிடப்படும் மறுஜென்மம் எடுத்த டெல்லி சாந்திதேவியின் வரலாறு இன்றளவும் உலகை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. மறுஜென்மம் தொடர்பான புதிர்களை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.
நானி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ஷ்யாம் சிங்கா ராய். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபஸ்டியான் உள்ளிட்டோரின் அட்டகாசமான நடிப்பில் பிரமிக்க வைக்கும் படம்.
கடந்த மாதம் டிசம்பர் 24-ல் வெளியான இத்திரைப்படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் மையக் கருத்தே மறுபிறவி தொடர்பானதுதான். இது தொடர்பான வழக்கில் மறுஜென்மம், மறுபிறவி உண்டு என்பதற்கு ஆதாரமாக டெல்லி சாந்திதேவி வழக்கு ஒன்றும் மகாத்மா காந்தி உள்ளிட்டோர் இந்த பிரச்சனையில் தலையிட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Tamilnadu lockdown: இன்று பொது போக்குவரத்து இயங்காது.. வேறென்னவெல்லாம் இயங்காது லிஸ்ட் இதோ!

குழந்தை சாந்திதேவி
1926-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் சாந்திதேவி. வெளிஉலகம் தெரியாத பிஞ்சுப் பருவத்தில் அதாவது 4-வது வயதிலேயே தாம் முன்ஜென்மத்தில் உ.பி.யின் மதுராவில் பிறந்தேன் என்றும் கேதர்நாத் என்ற தொழிலதிபரே தமது கணவர்; குழந்தை பிறந்த சில நாட்களிலேயே தாம் மரணித்துவிட்டதாக கூறியிருக்கிறார். தொடக்கத்தில் இந்த கருத்துகளை சாந்திதேவியின் பெற்றோர் சீரியசாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிஞ்சு குழந்தை இடைவிடாது முன்ஜென்மம் குறித்து பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காந்தியடிகள் தலையீடு
சாந்திதேவி படித்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் எத்தனையோ முறை முயன்றும் கூட முன்ஜென்மம் தொடர்பான அவரது புலம்பல்களை நிறுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் மதுராவில் சாந்திதேவி சொல்வது போல் உண்மை நிகழ்வுகள் இருக்கிறதா? என ஆராயத் தொடங்கினர். அப்போதுதான் அனைவருக்குமே தலை சுற்றத் தொடங்கியது. சாந்திதேவி சொன்னது அத்தனையும் 100% சதம் உண்மை என்றானது. இந்த விவகாரம் அப்போது மகாத்மா காந்தியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

விசாரணை கமிஷன்
இந்த விசாரணை கமிஷன்கள் சாந்திதேவியை மதுராவுக்கு கூட்டிச் சென்றன. மதுராவில் லுக்திதேவி என்பவர் வாழ்ந்து மறைந்த வீட்டுக்கு சிறுமி சாந்திதேவியே அழைத்துச் சென்றார். லுத்திதேவியின் உறவினர்கள் அத்தனை பேரையும் அடையாளம் காட்டினார். தாம் லுத்திதேவியின் மறுஜென்மம்தான் என்பதை பல சம்பவங்களின் மூலம் சாந்திதேவி நிரூபித்தார். 2 விசாரணை கமிஷன்களில் ஒன்று சாந்திதேவியின் கூற்றுகள் உண்மை; அதாவது மறுஜென்மம்தான் என்றே கூறினார்.

உலகமே அதிர்ந்தது
இது உலகம் முழுவதையும் அப்போது அறிவித்தது. சாந்திதேவி என்ற மாஜி லுக்தி தேவி 1987-ம் ஆண்டு மறைந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் இறுதி வரை வாழ்ந்த சாந்திதேவி, பல பேட்டிகள் கொடுத்திருக்கிறார். எந்த ஒரு பேட்டியும் முரண்களை சொன்னதே கிடையாது. 4 வயதில் என்ன சொன்னாரோ அதையே உறுதி செய்து கொண்டிருந்தார். பல வெளிநாட்டினரும் கூட சாந்திதேவியுடனே இருந்து ஆய்வு செய்து புத்தகங்களாகவும் வெளியிட்டிருக்கின்றனர். இத்தகைய சாந்திதேவி வழக்குதான் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் முக்கியமான ஆதாரமாக காட்டப்பட்டது.