டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர்ச்சியாக இருக்கிறது.. டெல்லி கலவர பகுதியை பார்வையிட்ட முன்னாள் நீதிபதி ஜோசப் குரியன்.. விளாசல்!

டெல்லியில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளை நேற்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் குரியன் பார்வையிட்டார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளை நேற்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் குரியன் பார்வையிட்டார்.

டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 320 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கலவரத்தில் காயம் அடைந்த பலர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெல்லி கலவரம் நடந்து முடிந்து ஒருவாரம் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை. தற்போது டெல்லியில் கொஞ்சம் அமைதி நிலவி வருகிறது. அங்கு போலீசார் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இந்த நிலையில் டெல்லியில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளை நேற்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் குரியன் பார்வையிட்டார். நேற்று மாலைக்கு பிறகு அவர், டெல்லியில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்றார். அவருடன் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏகே பட்நாயக் ஆகியோர் உடன் சென்றார்கள். இந்த நிலையில் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்கள் பேசினார்கள்.

செய்தியாளர் பேட்டி

செய்தியாளர் பேட்டி

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோசப் குரியன், டெல்லி கலவரம் பெரிய அதிர்ச்சி அளித்தது. இங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. நிலைமை எப்படி இருக்கிறது என்றுதான் பார்க்க சென்றோம். யார் தவறு செய்தார்கள் என்று பார்க்க செல்லவில்லை. பலர் டெல்லியில் இதனால் வீட்டை இழந்துள்ளனர்.

உடமைகள்

உடமைகள்

பலர் உடமைகளை, வாகனங்களை, சொத்துக்களை இழந்துள்ளனர், இன்னும் பலர் உறவுகளை இழந்துள்ளனர். சிலர் மீட்பு முகாம்களில் இருக்கிறார்கள். முகாம்களில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் வீட்டிற்கு செல்லவே பயப்டுகிறார்கள். இதற்கு உரிய உதவியை சட்ட அமைப்புகள் செய்து தர வேண்டும்.வழக்கறிஞர்கள், மூலம் இவர்களுக்கு உதவ வேண்டும்.

மிக முக்கியம்

மிக முக்கியம்

முக்கியமாக இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். பல்கலைக்கழகம் நிர்வாகங்கள் மாணவர்களை இதற்காக பயன்படுத்த வேண்டும். மாணவர்களை களமிறங்க செய்து, அவர்கள் நிவரான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இந்தியா என்பது மொழி, மதம், ஜாதி, இனம் என்ற வேறுபாடு கிடையாது ஒரே குடும்பம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் , என்று மிகவும் கடுமையாக குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Delhi Violence: Former Justice Joseph Kurian meets people in the riot-affected area yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X